இலியானா…
தெலுங்கு, இந்தி திரைப்படங்களில் பிரபல நடிகையாக வலம் வருபவர் இலியானா டிகுரூஸ். தமிழில் சில படங்களில் அவர் நடித்திருந்தாலும், நடிகர் விஜய் நடித்த நண்பன் படம் அவருக்கு நல்லாவே கைகொடுத்தது. குறிப்பாக, அந்தப் படத்தில் இடம்பெற்றிருந்த ‘இருக்கானா இடுப்பிருக்கானா’ என்ற பாட்டுக்கு அவர் ஆடிய விதம் அனைவரையும் கவர்ந்தது. முன்னதாக தமிழில் ‘கேடி’ படத்தில் நடித்து அறிமுகம் ஆனார்.
சில ஆண்டுகளுக்கு முன்னர் ஆஸ்திரேலியாவை சேர்ந்த புகைப்பட கலைஞர் அன்ரூ என்பவரை காதலித்து அவருடன் லிவிங் டூ கெதர் வாழ்க்கையை வாழ்ந்து வந்தார். இருவரும் திருமணம் செய்துகொள்ளவிருந்த நேரத்தில் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்துவிட்டார்கள். இதையடுத்து, உடல் எடை கூடிய அவரது புகைப்படங்கள் வெளியாகி ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இருப்பினும், அடிக்கடி பிகினி ஆடையில் தோன்றி ரசிகர்களை குஷிப்படுத்தி வருவார்.
இலியானா சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்தாலும், தனது தனிப்பட்ட வாழ்க்கை குறித்து எப்போதும் வாய் திறக்காமல் இருந்து வருகிறார். இதனிடையே செபாஸ்டியன் லாரன்ட் மைக்கேல் என்பவருடன் ரகசியமாக டேட்டிங் செய்துவந்தார். அவ்வப்போது இந்த ஜோடியின் புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் கசிந்து காதல் கிசுகிசுக்கப்பட்டது. அந்த நபர் பிரபல பாலிவுட் நடிகையான கத்ரீனா கைஃபின் சகோதரர்.
காதலை வெளிப்படுத்துவதற்கு முன்னரே இலியானா தான் கர்ப்பமாக இருப்பதை அறிவித்து ரசிகர்களுக்கு பேரதிர்ச்சி கொடுத்தார். இதனால் இலியானாவின் கர்ப்பத்திற்கு காரணம் யார்? என்ற கேள்வி எழுந்து பரபரப்பாக பேசப்பட்டது. அவ்வப்போது தனது கர்ப்பமான போட்டோக்களை வெளியிட்டு வந்த இலியானாவுக்கு கடந்த ஆகஸ்ட் 1ம் தேதி ஆண் குழந்தை பிறந்துள்ளது.
இந்நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் உடலுறவு குறித்த கேள்விக்கு பதில் அளித்த இலியானா, உடலுறவு என்பது உடற்பயிற்சி போன்றது. அதை சரியான முறையில் சிறப்பாக செய்யவேண்டும். இருவரது இதயமும் ஒன்றிணைந்து சேர்ந்தால் தான் அது மிகச்சிறப்பான உடலுறவாக இருக்கும். அப்போது தான் அது ஒரு முழுமையான உடலுறவாக இருக்கும் எனவும், ஆணுறை உபயோகிப்பது பால்வினை நோய்களை தடுக்கவும், தேவையற்ற கர்ப்பத்தை தடுக்கவும் தான் பயன்படுத்துகிறார்கள்.
அப்படி பயன்படுத்தும், போது ஆணுறை பாக்கெட்டுகள் கிழியாமல், ஓட்டை இல்லாமல் இருக்கிறதா என்று பரிசோதிக்க வேண்டும் எனவும், ஏனென்றால் தயாரிப்பின் போது ஏற்படும் சில தவறுகள் பாக்கெட்டுகள் கிழிந்தோ அல்லது ஓட்டையாக இருக்கவோ வாய்ப்பு இருக்கிறது. எனவே அதை அணியும் முன் அதை கவனிக்க வேணும் என்பது பாதுகாப்பான வழி என அவர் வெளிப்படையாக கூச்சமின்றி கூறியுள்ளார்.