ஆப்பிளின் ஏராளமான அப்பிளிக்கேஷன்கள் நீக்கம்!

938

ஆப்பிள் நிறுவனம் தனது iOS சாதனங்களுக்கான அப்பிளிக்கேஷன்களை ஆப்ஸ் ஸ்டோர் ஊடாக வழங்கி வருகின்றமை தெரிந்ததே.

அதேபோன்று சில நாடுகளுக்காக தனியான ஆப்ஸ் ஸ்டோர்களையும் கொண்டுள்ளது.

இந்நிலையில் சீனாவின் ஆப்ஸ் ஸ்டோரிலிருந்து ஏராளமான ஹேம்ஸ் அப்பிளிக்கேஷன்களை ஆப்பிள் நீக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


சீன அரசின் கொள்கைகளுக்கு அமைவாகவே இந்த அப்பிளிக்கேஷன்கள் நீக்கப்படவுள்ளன.தற்போது சீனாவின் ஆப்ஸ் ஸ்டோரில் சுமார் 60,000 ஹேம் அப்பிளிக்கேஷன்கள் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

இவற்றுள் கட்டணம் செலுத்த வேண்டிய அப்பிளிக்கேஷன்கள் மற்றும் இலவச அப்பிளிக்கேஷன்கள் என்பனவும் அடங்குகின்றன.இதேவேளை எதிர்வரும் ஜுலை மாதத்திலிருந்து சீனாவின் ஆப்ஸ் ஸ்டோரில் ஹேம் அப்பிளிக்கேஷன்களை பதிவேற்றம் செய்வதற்கு லைசென்ஸ் பெறுவது அவசியம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.