இளம் தொழிலதிபர் கொடூர கொலையில் முக்கிய திருப்பம்: கொலைகாரனின் புகைப்படம் உள்ளிட்ட தகவல் வெளியானது!!

859

அமெரிக்காவின் நியூயார்க்கில் இளம் தொழிலதிபர் கொடூரமான முறையில் கொல்லப்பட்ட விவகாரத்தில் 21 வயதேயான அவரது உதவியாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.

தற்போது அந்த நபரின் புகைப்படம் உள்ளிட்ட முக்கிய தகவல்கள் வெளியாகியுள்ளது.

இளம் தொழிலதிபர் ஃபஹிம் சாலேவின் உதவியாளரான 21 வயது டைரஸ் டெவன் ஹாஸ்பில் என்பவரே இந்த கொடூர கொலையை திட்டமிட்டு செய்துள்ளார். பொலிசார் பயன்படுத்தும் டேசர் கருவியை பயன்படுத்தி, சாலேவை முடக்கிய பின்னர் கத்தியால் சரமாரியாக தாக்கியுள்ளார்.

பின்னர் சடலத்தை துண்டு துண்டாக வெட்டியுள்ளார். ஆனால் சாலேவின் சகோதரி எதிர்பாராத வகையில் குறுக்கிட, ஹாஸ்பில் அங்கிருந்து தப்பியுள்ளார். தற்போது கைதாகியுள்ள ஹாஸ்பில் பல்லாயிரக்கணக்கான டொலர்களை நிறுவனத்தின் வங்கிக் கணக்கில் இருந்து விடுவித்ததாக சாலே கண்டுபிடித்த காரணத்தாலையே இந்த படுகொலை நடந்துள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.


ஆனால் சாலே, இந்த விவகாரம் தொடர்பில் பொலிசாரிடம் புகார் தெரிவிக்கவே இல்லை எனவும், மாறாக தவணை முறையில் அந்த பணத்தை ஹாஸ்பில் தமக்கு திருப்பி செலுத்தும் வகையில் ஒரு ஏற்பாடு செய்ததாகவும் தெரியவந்துள்ளது.

ஆனால் பணத்தை திருப்பிச் செலுத்தாமல் இருக்கவே ஹாஸ்பில், கொலையை செய்திருக்கலாம் எனவும் சந்தேகிக்கப்படுகிறது.

வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்ட ஹாஸ்பில் மீது கொலை வழக்குப் பதியப்பட்டுள்ளது.