கர்நாடகாவில்..
கர்நாடக மாநிலம் ஹாசன் மாவட்டத்தில் பிசிலஹள்ளி கிராமத்தில் வசித்து வந்தவர்கள் நஞ்சுண்டப்பா – உமா தம்பதியர். இவருக்கு இரண்டு பிள்ளைகள் இருந்த நிலையில் இவர்களில் 2-வது மகன் மஞ்சுநாத் என்பவர் அதே பகுதியைச் சேர்ந்த கைம்பெண் ஒருவரை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் கடந்த 23-ம் தேதியன்று காலையில் எழுந்த மஞ்சுநாத், திடீரெனெ அலறியுள்ளார். இதையடுத்து அக்கம் பக்கத்தினர் சென்று விரைந்து பார்த்தபோது நஞ்சுண்டப்பாவும், உமாவும் வாயில் நுரை தள்ளியவாறு சடலமாக கிடந்துள்ளனர்.
குடும்ப பிரச்சினை காரணமாக இருவரும் பூச்சிக்கொல்லி மருந்து குடித்ததாக மஞ்சுநாத் கூறியதையடுத்து உறவினர்கள் அனைவரும் சேர்ந்து இறுதிச் சடங்குகளை செய்துள்ளனர். அப்போது இதுகுறித்து சிலர் அளித்த புகாரின் பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்துள்ளனர்.
ஆனால் அதற்குள் இருவரது உடல்களும் புதைக்கப்பட்டதாக கூறப்பட்ட நிலையில் அதனை தோண்டி எடுத்து பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இதன் முதற்கட்ட விசாரணையில் நஞ்சுண்டப்பா – உமா ஆகியோர் கொலை செய்யப்பட்டிருப்பதாக கண்டறியப்பட்டது.
இதைத் தொடர்ந்து மஞ்சுநாத்தை விசாரித்தபோது பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது. விசாரணையில், மஞ்சுநாத்துக்கு அதே பகுதியைச் சேர்ந்த கைம்பெண் ஒருவருடன் தொடர்பு இருந்துள்ளது.
அந்த பெண்ணின் மீது மோகம் கொண்ட மஞ்சுநாத், அவ்வப்போது வீட்டில் இருந்து நகைகள், பணத்தை எடுத்து காதலியிடம் கொடுத்துள்ளார். இதனை கேள்விப்பட்ட நஞ்சுண்டப்பா, அந்த பெண்ணுடனான உறவை கை விடுமாறு கேட்டுக் கொண்டதாகவும்,
ஆனால் மஞ்சுநாத் இதற்கு மறுப்பு தெரிவித்தாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் விவசாயம் மூலமாக கிடைத்த வருவாயையும் ஆசைக் காதலிக்கு கொடுத்த மஞ்சுநாத்தை தாய் – தந்தை இருவரும் கடுமையாக கண்டித்துள்ளனர்.
இதனால் கடும் ஆத்திரமடைந்த மஞ்சுநாத், இதற்கு மேலும் தாய் தந்தையை உயிரோடு விட்டால் தன் காதலியுடன் உல்லாசமாக இருக்க முடியாது என கொலை திட்டம் ஒன்றை தீட்டியுள்ளார்.
அதன்படி 23-ம் தேதியன்று அப்பா அம்மாவுக்கு சாப்பாட்டில் பூச்சி மருந்தை கலந்து கொடுத்து கொலை செய்துள்ளார். மேலும் தன் மீது சந்தேகம் வரக்கூடாது என்பதற்காக கண்ணீர் விட்டு கதறி அழுது நாடகமாடியது போலீசார் விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.