கால்வாயில் சடலமாக கிடந்த 27 வயது பெண் மாடல்.. அதிர வைத்த பின்னணி!!

327

ஹரியானாவில்..

பஞ்சாப் மாநிலம் குருகிராமில் உள்ள ஹொட்டல் உரிமையாளர் அபிஜீத் சிங். இவருக்கும் மொடல் பெண்ணான திவ்யா பகுஜாவிற்கும் இடையே உறவு ஏற்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து இருவரும் தனிமையில் இருந்துள்ளனர். ஆனால், திவ்யா அதை வீடியோவாக எடுத்து அபிஜீத்தை மிரட்டி வந்ததாக கூறப்படுகிறது.

இதன் காரணமாக இருவருக்குமிடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் கடந்த 2ஆம் திகதி, ஹொட்டலில் வைத்து திவ்யா கொலை செய்யப்பட்டதாக பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது. ஆனால் அவரது உடல் கிடைக்கவில்லை. இதனால் பொலிஸார் தீவிர தேடுதலில் ஈடுபட்டனர்.

இதனைத் தொடர்ந்து ஹரியானாவின் தோஹானாவில் உள்ள பக்ரா கால்வாயில் திவ்யா பகுஜாவின் உடல் கண்டெடுக்கப்பட்டது. குர்கான் பொலிஸார் கூறும்போது, பஞ்சாபின் மூனாக் பகுதியில் உள்ள கால்வாயில் திவ்யாவின் சடலம் வீசப்பட்டிருந்ததாக தெரிவித்துள்ளனர். இதனையடுத்து பொலிஸார் நடத்திய விசாரணையில், Hisarயில் உள்ள குருத்வாரா சாலையில் வசிக்கும் ரவி ரங்கா,


பால்ராஜ் கில் ஆகியோர் இந்த கொலையில் ஈடுபட்டதாக தெரிய வந்தது. அத்துடன் அபிஜீத் சிங், ஹேம்ராஜ், ஓம் பிரகாஷ், மேகா போகத், பால்ராஜ் கில் ஆகியோரை பொலிஸார் கைது செய்துள்ளனர். ஆனால், குற்றம்சாட்டப்பட்ட மற்றொரு நபரான ரவி பங்கா தலைமறைவானார். அவரை தேடும் முயற்சியில் பொலிஸார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.