சமூக ஊடகங்களில் வலுத்த எதிர்ப்பு: மூன்று இளைஞர்களின் மரண த ண்டனை நிறுத்தம்!!

998

சமூக ஊடகங்களில் எழுந்த கடும் எதிர்ப்பை அடுத்து ஈரானிய அதிகாரிகள் மூன்று இளைஞர்களின் மரணதண்டனையை நிறுத்தி வைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

செவ்வாய்க்கிழமை ஈரான் உச்சநீதிமன்றம் அவர்களின் மரண தண்டனையை உறுதி செய்ததை அடுத்து, மரண தண்டனையை நிறுத்து என பொருள்படும்

உள்ளூர் மொழி வாசகம் சமூக ஊடகங்களில் சுமார் 7.5 மில்லியன் முறை பயன்படுத்தப்பட்டுள்ளது.

கடந்த நவம்பரில் பெட்ரோல் விலையை உயர்த்துவதற்கான ஈரான் அரசாங்கத்தின் முடிவால் தூண்டப்பட்டு ஆர்ப்பாட்டத்தில் குதித்த, வெறும் 20 வயதைக் கடந்த Amirhossein Moradi, Mohammad Rajabi மற்றும் Saeed Tamjidi ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.


தொடர்ந்து முன்னெடுக்கப்பட்ட விசாரணையில் நாட்டுக்கு எதிரான நடவடிக்கையில் ஈடுபட்டதற்காக அவர்கள் மூவருக்கும் மரண தண்டனை விதிக்கப்பட்டது.

இந்த நிலையில், இளைஞர்கள் மூவருக்கும் விதிக்கப்பட்ட மரண தண்டனையை எதிர்த்து வலுவான பிரச்சாரங்கள் முன்னெடுக்கப்பட்டது. இதில் பல பிரபலங்களும் சமூக ஊடக பிரச்சாரத்தில் பங்கேற்று தங்கள் ஆதரவை பதிவு செய்தனர்.

தற்போது மரண தண்டனையை நிறுத்தியுள்ள நிலையில், மீண்டும் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. கடந்த நவம்பரில் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டத்தின் போது இந்த மூன்று பேரும் கைது செய்யப்பட்டனர், நாடு முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்திய இந்த ஆர்ப்பாட்டத்தில் பலர் கொல்லப்பட்டனர்.

இதனிடையே, இந்த வழக்கு தொடர்பில் முதன்முறையாக மூன்று பேருக்கான வக்கீல்களும் தங்கள் தரப்பினர்களுக்கு எதிரான நீதிமன்ற ஆவணங்களையும் ஆதாரங்களையும் ஆராயலாம் என்று கூறப்பட்டதாக தெரியவந்துள்ளது.