ஜோர்தானில் தமிழர்கள் உள்ளிட்ட இலங்கையர்கள் மீது தாக்குதல்!

849

ஜோர்தானில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தமிழர்கள் உள்ளிட்ட இலங்கை தொழிலாளர்கள் மீது அந்நாட்டு பொலிஸார் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

அத்துடன், தொழிலாளர்களுக்கும், தூதரக அதிகாரிகளுக்கும் இடையிலான பேச்சுவார்த்தையின் போது ஏற்பட்ட பதற்றமான நிலையை அடுத்து கண்ணீர்ப்புகை குண்டு வீசப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

கொரோனா தொற்று காரணமாக பாதிக்கப்பட்டுள்ள இலங்கை தொழிலாளர்கள் தங்களை சொந்த நாட்டிற்கு மீள அனுப்புமாறு கோரியே இந்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கொரோனா வைரஸ் தொற்று காரணமாக தாங்கள் வேலையில்லாமல் இருந்துள்ளதாகவும், தொடர்ந்து நான்கு மாதங்கள் வரையில் தமக்குரிய ஊதியம் வழங்கப்படவில்லை எனவும் தொழிலாளர்கள் கூறியுள்ளனர்.


இந்நிலையில், தங்களை சொந்த நாட்டிற்கு அனுப்புவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க தவறியுள்ளதாக போராட்டத்தில் ஈடுபட்டிருந்த இலங்கை தொழிலாளர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

அந்நாட்டு பொலிஸார் கண்ணீர்ப்புகை தாக்குதல் நடத்தியபோது சுமார் 500 இலங்கை தொழிலாளர்கள் வரை அங்கு இருந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.