திரிஷாவின் திடீர் முடிவால் ரசிகர்கள் அதிர்ச்சி!!

1025

தென்னிந்திய திரையுலகத்தில் கடந்த 17 வருடங்களாக நாயகியாக இருந்து வருபவர் திரிஷா. தமிழ், தெலுங்கு, மலையாளத்தில் பல முன்னணி ஹீரோக்களுடன் நடித்துள்ளார்.

தற்போது கொரோனா ஊரடங்கால் சினிமா படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டதால் வீட்டிலேயே இருக்கும் திரிஷா, சமூக வலைத்தளங்கள் வாயிலாக ரசிகர்களை உற்சாகப்படுத்தி வந்தார்.

விழிப்புணர்வு ஏற்படுத்துவது, டிக்டாக் வீடியோ பதிவிடுவது என சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருந்தார்.


இந்த நிலையில், நடிகை திரிஷா, சமூக வலைத்தளங்களில் இருந்து தற்காலிகமாக விலகுவதாக அறிவித்துள்ளார்.

இது குறித்து அவர் டுவிட்டரில் பதிவிட்டுள்ளதாவது:

“சந்தோஷம் தான். ஆனால், இந்த நேரத்தில் என் மனதுக்கு ஒரு மறதி தேவை. டிஜிட்டல் ஒரு போதைப்பொருள். வீட்டிலேயே இருங்கள். பாதுகாப்பாக இருங்கள். இதுவும் கடந்துபோகும். உங்கள் அனைவரையும் நேசிக்கிறேன். விரைவில் சந்திப்போம்” என்று குறிப்பிட்டுள்ளார்.