சினிமாவில் சாதிக்க வேண்டும் என துடிப்பவர்கள் பலர். ஏதாவது பாதை கிடைத்தால் அதைக்கொண்டு தனக்கான இடத்தை பிடித்துவிடலாம் என போராடுபவர்களும் இருக்கிறார்கள்.
இந்நிலையில் சென்னை வடபழனி சாலையோரம் அழுக்கு படிந்த கிழிந்த உடையுடன், சிக்கு பிடித்த தலையோடு கையில் பேப்பர் பேனாவுடன் இருந்தவரை புகைப்படமாக எடுத்து சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளனர்.
அவரிடம் அருகில் சென்று விசாரித்த போது அவர் தன்னுடைய கதைகளை திருவிட்டனர் என கூறியுள்ளனர். மேலும் அவர் கவிதைகள் பல எழுதி வைத்திருந்தாராம்.
சிம்ரனின் தங்கை மோனல் மற்றும் நடிகர் குணால் நடித்த பார்வை ஒன்றே படத்தின் உதவி இயக்குனர் குருநாதன் என்பது தெரியவந்துள்ளது.அந்த படத்தில் வாய்ப்பு சிம்ரன் மூலமாகதான் கிடைத்தது என வதந்தி பரவி வருகிறது.
அவர் வாய்ப்பு தேடி பலமுறை அலைந்த போது எதுவும் கிடைக்காமல் சாப்பிட வழியில்லாமல் பிச்சைக்காரர் போல கிடந்து பலரையும் அதிர்ச்சியாக்கியுள்ளது.அந்த படத்திற்கு பிறகு எந்த படவாய்ப்பும் அமையவில்லை.
இந்நிலையில் அவரின் நண்பர் உடனே குருநாதனை சொந்த ஊரான திருச்சி மணப்பாறைக்கு அழைத்துச்சென்றுள்ளாராம்.இந்த சம்பவம் தற்போது திரையுலகத்தில் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.