தோனி பட நடிகர் சுஷாந்த் மரணத்துக்கு என்ன காரணம்..? முதல்கட்ட விசாரணையில் வெளியான சில அதிர்ச்சி தகவல்கள்..!

1352

கிரிக்கெட் வீரர் தோனியின் வாழ்க்கை வரலாறை மையமாக கொண்டு உருவான M.S. Dhoni: The Untold Story என்ற படத்தின் நாயகனான நடித்த பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் தற்கொலை செய்துகொண்ட நிலையில் அவரது தற்கொலைக்கான காரணம் குறித்து சில தகவல்கள் வெளியாகியுள்ளது.

தற்கொலை குறித்து வெளியான முதல் கட்ட தகவலின்படி, சுஷாந்த் சிங் கடந்த 6 மாதங்களாக மன அழுத்தம் காரணமாக பாதிக்கப்பட்டிருந்ததாகவும், அதற்காக அவர் உட்கொண்ட மருந்து குறித்த சீட்டுகள் அவரது அறையில் இருந்து கைப்பற்றப்பட்டுள்ளதாகவும், மனஅழுத்தம் காரணமாக சுஷாந்த் சிங் தற்கொலை செய்திருக்கலாம் என போலீசார் தெரிவித்துள்ளனர்.

சில மாதங்களுக்கு முன்னர் இவரது மேலாளர் மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்துகொண்ட நிலையில் போலீசார் அந்த வழக்கு தொடர்பாக விசாரணை நடத்திவந்தனர். தற்போது சுஷாந்த்தும் தற்கொலை செய்திருப்பது அனைவர் மத்தியிலும் அதிர்ச்சியை ஏறப்டுத்தியுள்ளது.


34 வயதே ஆகும் சுஷாந்த் சிங் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் எற்படுத்தியுள்ளநிலையில் பலரும் தங்கள் இரங்கலை தெரிவித்துவருகின்றனர்.