நடிகைகளிடம் அத்துமீறல் அந்த ஒல்லி இசையமைப்பாளர்…. இன்னும் மோசம் பாடகி கௌரி லக்ஷ்மி பகீர் தகவல்!!

219

மலையாள திரையுலகம் கடந்த 3 தினங்களாக அதிரிபுதிரியாக அலோலப்பட்டுக் கொண்டிருக்கிறது. மீ டூ சர்ச்சைகளின் போது கூட அசைந்து கொடுக்காத மலையாள திரையுலகில், ஹேமா கமிட்டி அறிக்கை பெரும் பரபரப்பை பற்ற வைத்திருக்கிறது.

மலையாள சினிமாவில் புகழ் வெளிச்சத்தில் இருக்கும் பலரது முகத்திரைகளையும் கிழித்திருக்கிறது ஹேமா கமிட்டி அறிக்கை. இது வரையில் வெளியான அறிக்கை குறித்த செய்திகளில் எந்த குறிப்பிட்ட பெயர்களும் வெளியிடப்படவில்லை.

என்றாலும் வெளிவரும் செய்தி அறிக்கைகளை வைத்து சம்பந்தப்பட்ட நடிகர்களை துல்லியமாக சுட்டிக்காட்டுவதற்கு ஒன்றுக்கு மேற்பட்ட குறிப்புகளை வழங்கி சமூக வலைத்தளங்களில் பொளந்து கட்டுகிறார்கள் மலையாள திரைப்பட ரசிகர்கள்.

இந்த அறிக்கைக்கு பல பிரபலங்கள் தற்போது பதிலளித்து வரும் நிலையில், பிரபல பின்னணி பாடகி கவுரி லெக்ஷ்மியின் பதில் சமூக வலைதளங்களில் விவாதிக்கப்பட்டு வருகிறது.இது குறித்து கூறியிருக்கும் பாடகி கெளரி லட்சுமி:”நான் நீண்ட காலமாக தொழில்துறையின் ஒரு பகுதியாக இருக்கிறேன்.

எனவே இந்த அறிக்கை என்னை ஆச்சரியப்படுத்தவில்லை. இந்த இடத்தில் விஷயங்கள் எவ்வாறு செயல்படுகின்றன என்பதை நாம் அனைவரும் அறிவோம். திரையுலகில் அமைதியான ஆண் எதேச்சாதிகாரம் உள்ளது.

ஒரு பயனுள்ள மாற்றத்தை கொண்டு வர, பெண்கள் முடிவெடுக்கும் இடங்களில் வர வேண்டும். அனைவருக்கும் சமமாக ஊதியம் பெறும் அந்த நாள் எப்போது வரும் என்று தெரியவில்லை.


அதே போல நடிகைகளுக்கு மட்டும் பாலியல் தொல்லைகள் தரப்படுகிறது என்பது கிடையாது. கேமராவுக்குப் பின்னால் இருக்கும் பலரும் இப்படி பாலியல் ரீதியாக துஷ்பிரயோகத்தின் சுமைகளைத் தாங்குகிறார்கள்.

என் வழக்கை எடுத்துக் கொள்ளுங்கள்; 2012ல் ‘காசநோவா’ படத்துக்கு பாடலாசிரியராகவும், இசையமைப்பாளராகவும் களம் வந்தேன். அப்போது எனக்கு 15 வயசு தான் இருக்கும். அப்போது 35 வயதாகும் அந்த ஒல்லி இசையமைப்பாளர் என்னை தவறாக அணுகினார்.

அதுதான் என்னுடைய முதல் திரைப்படப் பிரவேசம். இப்போது இருந்திருந்தால் போக்ஸோ சட்டப் பிரிவின் கீழ் வழக்கு போடப்பட்டிருக்கும். அவர் இப்போதும் பிரபலமான இசையமைப்பாளராக இருக்கிறார். கௌரியின் இந்த வெளிப்பாடு, குற்றம் சாட்டப்பட்ட இசையமைப்பாளரைக் கண்டுபிடிப்பதற்காக சமூக ஊடகங்களில் நடக்கும் யூகத்தை தூண்டிவிட்டிருக்கிறது.