பாலிவுட்டிலும் வெடித்தது நடிகைகள் சண்டை – டுவிட்டரை தெறிக்கவிடும் கங்கனா ரசிகர்கள்!

925

நடிகை கங்கனாவை விமர்சித்த நக்மாவை அவரது ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் வறுத்தெடுத்து வருவது பாலிவுட்டில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

பாலிவுட் நடிகை

பாலிவுட்டில் டாப் மோஸ்ட் நடிகையாக வலம் வருபவர் கங்கனா ரனாவத். திரையில் நடித்துக்கொண்டே சமூக பிரச்சனைகளுக்கு அதிகம் குரல் கொடுக்கிறார். ‘கேங்ஸ்டர்’ திரைப்படம் மூலம் தனது சினிமா வாழ்க்கையை தொடங்கிய அவர், முதல் படத்திலேயே தனது நடிப்பால் முத்திரை பதித்தார். இவர் தமிழில் நடிகர் ஜெயம் ரவியுடன் ‘தாம் தூம்’ படத்தில் நடித்துள்ளார்.

பாலிவுட் திரையுலகில் ஒரு அசைக்க முடியாத நடிகையாக திகழ்ந்து வரும் கங்கனாவிற்கு, மத்திய அரசு மிக உயரிய விருதான “பத்ம ஸ்ரீ” விருது வழங்கி கெளரவித்தது.


நக்மா டுவீட், கங்கனா பதிலடி

பிரபல பாலிவுட் நடிகர் சுஷாந்த் ராஜ்புத் மரணம் தொடர்பாக கங்கனா ரனாவத் தனது கருத்துக்களை தெரிவித்து வரும் நிலையில், நடிகையும், அரசியல்வாதியுமான நக்மா அவரைப் பற்றி தனது டுவிட்டரில் தகவல் ஒன்றை பதிவிட்டுள்ளார். அது தற்போது பூதாகரமாக வெடித்துள்ளது. நடிகை நக்மா, கங்கனாவையும் – பஞ்சோலியையும் இணைத்து பேசியுள்ளார். இதற்கு கங்கனா பதிலடி கொடுத்துள்ளார். இதுதொடர்பாக டுவிட்டரில் பதிவிட்டுள்ள அவர், பஞ்சோலி எனது காதலர் கிடையாது என பலமுறை விளக்கமளித்துவிட்டேன். ஆரம்பத்தில் ஆலோசகராக இருந்த அவர், திடீரென தவறான ஆலோசனைகளை வழங்கும் நபராக மாறிவிட்டார். அதனால் அவரை விலக்கி விட்டேன். ஒவ்வொரு முறையும் ஆடிஷனுக்கு செல்லும் போது பஞ்சோலி தாக்கியுள்ளார். அவர் மூலமாக நான் திரைத்துறைக்கு வரவில்லை. இவ்வாறு நடிகை கங்கனா குறிப்பிட்டுள்ளார்.

விளாசும் ரசிகர்கள்
கங்கனாவின் டுவிட்டை பார்த்த அவரது ரசிகர்கள், நக்மாவை விளாசி வருகின்றனர். சமூகத்தில் ஒரு நல்ல பெயரை எடுத்துள்ள நடிகை கங்கனாவை, சுஷாந்த் மரணத்திற்கு குரல் எழுப்பி வரும் நடிகைகளில் ஒருவரான கங்கனாவை இப்படி தவறாக சித்தரித்து கேலி,

கிண்டல் செய்வதை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும் என ரசிகர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். ஒருவரைப் பற்றி பேசும் போது அவர்களை பற்றி நன்கு தெரித்து புரிந்து பேச வேண்டும் என்றும் நக்மாவிற்கு அறிவுரை கூறி வருகின்றனர்.