பிரான்சில் தேவாலயம் ஒன்றில் தாக்குதல் நடத்த முற்பட்ட நபரை காரை வைத்து தடுத்து நிறுத்திய சம்பவம் பலரிடையே பாராட்டை பெற்று வருகிறது.
பிரான்சின் Blanc-Mesnil நகரில் இருக்கும் இரவு விடுதி ஒன்றில், கடந்த சனிக்கிழமை இரவு பிறந்தநாள் விருந்து நிகழ்வு ஒன்று நடைபெற்றது.
காலை 7 மணி அளவில் விருந்து நிறைவுக்கு வந்ததால், விடுதி மூடப்படும் வேளையில், திடீரென்று 32 வயது மதிக்கத்தக்க நபர், ஒருவர் கையில் கூர்மையான கத்தி மற்றும் கைத்துப்பாக்கி ஒன்றை வைத்துக் கொண்டு,Blanc-Mesnil தேவாலயம் நோக்கி வந்துள்ளார்.
அப்போது, அவர் சத்தமாக அல்லா ஹூ அக்பர் என கோஷமிட்டவாறு வர, அப்போது அந்த வழியே காரில் சென்று கொண்டிருந்த 38 வயது மதிக்கத்தக்க நபர், குறித்த ஆயுததாரியின் மீது காரை மோதி, அவரை தடுத்து நிறுத்தினார்.
இதையடுத்து கீழே விழுந்த அந்த நபரை உடனடியாக மடக்கி பிடித்து ஆயுதங்களை கைப்பற்ற, அதற்குள் இந்த சம்பவம் குறித்து பொலிசாருக்கு தெரியவந்ததால், அவர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து குறித்த ஆயுததாரியை கைது செய்தனர்.
இது தொடர்பான விசாரணைகளை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர். இருப்பினும் அந்த சமயத்தில் ஹீரோ போல் செயல்பட்டு,
பலரின் உயிரைக் காப்பாற்றிய காரில் வந்த அந்த நபரை பலரும் பாராட்டி வருகின்றனர்.