பிரித்தானியாவில் புற்றுநோயால் மரணமடைந்த தாயார்: 4 ஆண்டுகளுக்கு பிறகு 13 வயது மகள் எடுத்த அதிர்ச்சி முடிவு!!

442

பிரித்தானியாவில் தமது தாயார் மார்பக புற்றுநோயால் மரணமடைந்த நிலையில், நான்கு ஆண்டுகளுக்கு பிறகு 13 வயது சிறுமி தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

எல்லிஸுக்கு இரண்டு வயதாக இருந்தபோது எல்லிஸின் தாயார் லோர்னாவுக்கு மார்பக புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டது, எல்லிஸுக்கு ஒன்பது வயதாக இருந்தபோது லோர்னா சிகிச்சை பலனின்றி இறந்தார். இந்த நிலையில் எசெக்ஸில் உள்ள ஹெய்பிரிட்ஜைச் சேர்ந்த எல்லிஸ் சம்போரா கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் தற்கொலை செய்து கொண்டார். இந்த வழக்கை விசாரித்துவரும் எசெக்ஸ் பொலிஸைச் சேர்ந்த புலனாய்வு அதிகாரி டோனி பெஞ்சமின்,

கடந்த சில ஆண்டுகளாக சிறுமி எல்லிஸ் கடும் துயரத்தை அனுபவித்து வந்துள்ளார் எனவும், இதனால் பல்வேறு அமைப்புகளின் உளவியல் ரீதியான உதவிகளையும் அவர் பெற்று வந்துள்ளார் என சுட்டிக்காட்டியுள்ளார். தமது தாயாரின் மறைவை தாங்க முடியாத எல்லிஸ் தற்கொலை செய்து கொண்டதையும் அவர் உறுதி செய்துள்ளார்.


எல்லிஸின் படுக்கையறையில் இருந்து தனிப்பட்ட நாட்குறிப்பு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது எனவும், அத்துடன் மாத்திரைகள் சிலவற்றையும் கண்டெடுக்கப்பட்டதாக தெரிவித்துள்ளார். மேலும், அவரது படுக்கைக்கு அடியில் மருந்துகளின் பைகள் காணப்பட்டன என்பதையும், அவரது மரணத்தைச் சுற்றி சந்தேகத்திற்கிடமான சூழ்நிலைகள் எதுவும் இல்லை என்பதையும் அவர் உறுதிப்படுத்தினார்.

எல்லிஸ் சம்பவத்தன்று அதிகப்படியான மருந்து உட்கொண்டதே அவர் மரணத்திற்கு காரணமாக அமைந்தது என உடற் கூராய்விலும் உறுதி செய்யப்பட்டது.