புது காதலரை மீண்டும் திருமணம் செய்ய போகிறேன்! கணவரிடம் மன்னிப்பு!

509

தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகையாக அறியப்படும் ஹாரத்தி பேஸ் ஆப் மூலமாக தனது முகத்தை ஆணாக மாற்றி அதை வெளியிட்டுள்ளார்.

தமிழ் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மற்றும் சினிமாக்களில் நகைச்சுவை கதாபாத்திரங்களில் நடித்து பிரபலமானவர் ஆர்த்தி. இவர் தன் சக நடிகரான கணேஷை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.

அதன் பின் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அவர் அங்கு பல சர்ச்சைகளில் சிக்கி பாதியிலேயே வெளியேறினார்.


ஆனால் பிக்பாஸ் மூலமாக சினிமா வாய்ப்புகள் கிடைக்கும் என எதிர்பார்த்த அவருக்கு ஏமாற்றமே மிஞ்சியது.

இந்நிலையில் தற்போது அனைவரும் பேஸ் ஆப் மூலமாக தங்கள் பாலினமாற்று புகைப்படத்தை வெளியிட்டு வரும் நிலையில் ஹார்த்தியும் அதுபோல தன் பேஸ் ஆப் ஆண் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

மேலும் அந்த புகைப்படத்தில் ‘என்னுடைய புதிய அழகான காதலன். நான் அவரை திருமணம் செய்துகொள்ள போகிறேன். என்னை மன்னித்து விடுங்கள் கணேஷ்’ எனக் கூறியுள்ளார்.