மகளின் பிறந்தநாளை கொண்டாடியபின் இராணுவ வீராங்கனை தற்கொலை.. இறப்பிற்கு முன் உருக்கமான பதிவு!!

413

அமெரிக்காவில்..

அமெரிக்காவில் பெண் இராணுவ சிப்பாய் ஒருவர், தனது மகளின் பிறந்த நாள் முடிந்த சில நாட்களில் தற்கொலை செய்துகொண்டார். Michelle Young என்ற 34 வயது பெண் இராணுவ வீராங்கனையாக பணியாற்றி வந்தார். ஆப்கானிஸ்தானில் இருமுறை பணியாற்றிய Michelle Young, 2021ஆம் ஆண்டில் தனது இராணுவ ஒப்பந்தத்தை 20 ஆண்டுகள் பணியாற்ற நீட்டித்தார்.

ஆனால், தனது ஓய்வு நேரங்களில் உள்ளூர் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு தொண்டாற்றியிருந்தார். அதே சமயம் உடற்பயிற்சி Influencer ஆகவும் இருந்துள்ளார். இதன்மூலம் அவர் ஒரு லட்சம் Followers-ஐ இன்ஸ்டாகிராமில் வைத்திருந்தார்.

இந்த நிலையில் நேற்று முன் தினம் Michelle Young திடீரென தற்கொலை செய்துகொண்டார். அவர் இந்த முடிவினை எடுப்பதற்கு சில நாட்கள் முன்பு தான், மகள் கிரேசியின் 12வது பிறந்தநாளை கொண்டாடினார்.


அப்போது அவர் வெளியிட்ட பதிவில், ‘எனக்கு தெரிந்த மிகவும் இனிமையான மகளுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள். நான் உன்னை என்றென்றும் நேசிக்கிறேன் kiddo. என் வாழ்க்கையின் சிறந்த பகுதி உங்கள் அம்மாவாக இருப்பதுதான்’ என உருக்கமாக கூறியிருந்தார்.