மட்டக்களப்பில் பெண் படுகொலை!! நடந்தது என்ன?

988

மட்டக்களப்பு களுவாஞ்சிக்குடி பகுதியில் நேற்று காலை 6 மணியளவில் பெண் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார் என களுவாஞ்சிக்குடி பொலிஸார் தெரிவித்தனர்.

களுவாஞ்சிக்குடி சரஸ்வதி வித்தியாலய வீதியில் வசித்து வந்த இரு பிள்ளைகளின் தாயான துர்க்கா என்பவரே கொலை செய்யப்பட்டவர் ஆவார்,

இவருக்கு வயது 34.

இதையடுத்து பெண்னின் கணவன் களுவாஞ்சிக்குடி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.


கணவனுக்கு மனைவிக்கும் ஏற்பட்ட குடும்பத் தகராறு காரணமாக தனது மகளை மருமகனே கொலை செய்துள்ளார் என உயிரிழந்த பெண்ணின் தாயாரான தேவநேசராசா சாந்தநிதி பொலிஸில் முறையிட்டுள்ளார்.

களுவாஞ்சிக்குடி பொலிஸாரும், தடயவியல் பொலிஸ் பிரிவும் இணைந்து விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.