மார்க்கெட் போச்சு… திருமணத்திற்கு தயாரான ஸ்ரீ திவ்யா.. மாப்பிள்ளை யார் தெரியுமா?

128

ஸ்ரீ திவ்யா….

தமிழ் சினிமாவில் ஹோம்லி நடிகையாக அறிமுகமாகி ஒட்டுமொத்த இளைஞர்களையும் தன் வசப்படுத்தியவர் நடிகை ஸ்ரீ திவ்யா. இவர் குழந்தை நட்சத்திரமாக மூன்று வயதில் தன் திரையுலக வாழ்க்கையைத் தொடங்கினார்.

தெலுங்கு தொலைக்காட்சி தொடர்களில் நடித்து குழந்தை நட்சத்திரமாக பிரபலமான ஸ்ரீ திவ்யா 2010 ஆண்டு ரவி பாபு இயக்கிய மனசார எனும் தெலுங்கு திரைப்படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். இந்த படம் பிளாப் ஆனதால் பிறகு 2012 இல் மாருதி இயக்கிய “பஸ் ஸ்டாப்” படத்தில் பிரின்சுடன் இணைந்து நடித்த இப்படமானது, வெற்றி அடைந்தது.

அதன் பின்னர் தமிழில் வருத்தப்படாத வாலிபர் சங்கம் திரைப்படத்தில் சிவ கார்த்திகேயன் உடன் கதாநாயகியாக நடித்து தமிழ் திரையுலகத்திற்கு அறிமுகமானர். முதல் படத்திலே அவரது நடிப்பு பெரிதும் பாராட்டப்பட்டு இளைஞர்களின் பேவரைட் ஹீரோயினாக இடம் பிடித்தார்.


பிறகு பென்சில் படத்தில் இசையமைப்பாளர் ஜி.வி பிரகாஷ்க்கு ஜோடியாக நடித்தார்.மேலும் ஈட்டி, காக்கி சட்டை மற்றும் வெள்ளைக்கார துரை படங்களிலும் நடித்துள்ளார். நல்ல பீக்கில் இருந்தபோது அம்மணி சினிமா வாழ்க்கையை தானே அழித்துக்கொண்டார்.

ஆம், கடந்த 5 வருடங்களுக்கு முன்னர் இமான் அண்ணாச்சி கிரகபிரவேசதில் ஓவராக மது அருந்திவிட்டு தலைகால் புரியாமல் மதுபோதையில் முகம் சுளிக்கப்படி மோசமாக ஆட்டம் போட்டுள்ளார். அங்கிருந்த பலர் எடுத்து கூறியும் கேட்காத ஸ்ரீ திவ்யாவின் போதை தெளியவைத்து பின்னர் வீட்டிற்கு அனுப்பி வைத்துள்ளனர்.

இந்த செய்திது காட்டுத்தீயாக பரவி கோலிவுட் சினிமா ரசிகர்களின் வெறுப்பை சம்பாதித்தார். இதனால் அவருக்கு யாரும் வாய்ப்பு கொடுக்கவில்லை. அவரும் சில ஆண்டுகள் வாய்ப்பு தேடி அலைத்துள்ளார். பின்னர் போட்டோ ஷூட் நடத்தியும் பார்த்தார் ஆனால் ஒன்னும் வேலைக்கு ஆகவில்லை.

இதனால் தற்போது திருமணம் செய்துக்கொள்ள முடிவெடுத்துள்ளாராம் நடிகை ஸ்ரீ திவ்யா, சமீபத்திய பேட்டி ஒன்றில் கலந்துக்கொண்ட அவரிடம் உங்களின் திருமணம் எப்போது? அப்படி நடந்தால் காதல் திருமணமா? பெரியவர்கள் நிச்சயிக்கப்பட்ட திருமணமா? என்ற கேள்வி கேட்கபட்டது. அதற்கு நடிகை ஸ்ரீதிவ்யா, என் திருமணம் காதல் திருமணமாக தான் இருக்கும். நிச்சயம் நான் என் காதலனை தான் திருமணம் செய்து கொள்ளப்போகிறேன் என கூறியுள்ளார். இதன் மூலம் ஸ்ரீதிவ்யா தனது திருமண தேதியை விரைவில் அறிவிப்பார் என எதிர்பார்க்கலாம்.