விஷப்பால் ஊற்றி குழந்தையை கொன்ற தம்பதி கைது!!

145

வேலூர் மாவட்டம், ஒடுகத்தூர் அடுத்த சேர்பாடி ஊராட்சிக்கு உட்பட்ட பொம்மன்குட்டை பகுதியை சேர்ந்தவர் ஜீவா(30), பெயின்டர். இவரது மனைவி டயானா(25).

இவர்களுக்கு கடந்த மாதம் 27ம் தேதி பெண் குழந்தை பிறந்தது. 2வதாகவும் பெண் குழந்தை பிறந்த ஆத்திரத்தில் கடந்த 4ம் தேதி பப்பாளி மரம் மற்றும் எருக்கன் செடியில் இருக்கும் விஷப்பாலை கொடுத்து கொன்று, வீட்டின் பின்புறம் புதைத்துள்ளனர்.

டயானாவின் தந்தை சரவணன் கொடுத்த புகாரின்படி வேப்பங்குப்பம் போலீசார் விசாரித்தனர்.

இதையடுத்து நேற்று முன்தினம் குழந்தையின் சடலத்தை தோண்டி எடுத்து, பிரேத பரிசோதனைக்குப்பின் ஒடுகத்தூர் ஆத்துமேடு பகுதியில் அடக்கம் செய்யப்பட்டது.

தொடர்ந்து, குழந்தையை கொன்று புதைத்தது தொடர்பாக ஜீவா, அவரது மனைவி டயானா மற்றும் ஜீவாவின் தாய் பேபி ஆகிய 3 பேரையும் நேற்று அதிகாலை 3 மணியளவில் போலீசார் பிடித்தனர்.

அதேபோல், அவர்களுக்கு அடைக்கலம் கொடுத்த ஏரியூர் பகுதியை சேர்ந்த சேர்பாடி ஊராட்சி செயலாளர் உமாபதியையும் பிடித்து விசாரணை நடத்தினர். இதைத்தொடர்ந்து, ஜீவா, அவரது மனைவி டயானாவை போலீசார் கைது செய்தனர்.