இன்றைய ராசிபலன்..
மேஷம்
மேஷ ராசியினர் இன்றைய தினம் கொடுத்த வாக்கை நிறைவேற்றுவீர்கள். அரசாங்க ரீதியான காரியங்களில் வெற்றி கிடைக்கும். கொடுக்கல் – வாங்கல் திருப்திகரமாக இருக்கும். புதிய ஆபரண சேர்க்கை ஏற்படும். வாழ்க்கைத் துணையின் ஆதரவு இருக்கும்.
ரிஷபம்
ரிஷப ராசியினருக்கு இன்றைய தினம் எதிர்பாராத தடங்கல்கள் ஏற்படும். இருந்தாலும் சமாளித்து வெற்றி காண்பீர்கள். எந்த ஒரு விடயத்திலும் சிந்தித்து செயல்பட வேண்டும். புதிய தொழில், வியாபாரத்திற்கான வழிகளை ஆராய்வீர்கள். தன வரவு திருப்திகரமாக இருக்கும்.
மிதுனம்
மிதுன ராசியினருக்கு இன்றைய தினம் விருப்பங்கள் அனைத்தும் நிறைவேறும். புதிய வேலை தொடர்பான முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். உறவினர்கள், நண்பர்களை சந்தித்து மகிழ்வீர்கள். எதிர்பாராத பொருள் வரவு உண்டு. சிலர் வெளியூர் பயணங்களை மேற்கொள்வார்கள்.
கடகம்
கடக ராசியினருக்கு இன்றைய தினம் வெளிவட்டாரத்தில் செல்வாக்கு உயரும். மதியத்திற்கு மேல் எதிர்பாரா செலவுகள் உண்டாகும். திருமணம், விருந்து போன்ற நிகழ்ச்சிகளில் பங்கேற்பார்கள். சிலர் வாழ்க்கைத் துணையுடன் ஆன்மிகத்தலங்களுக்கு சென்று வருவார்கள்.
சிம்மம்
சிம்ம ராசியினருக்கு இன்றைய தினம் குடும்பத்தினரின் முழு ஆதரவு கிடைக்கும். அரசியல் துறையில் இருப்பவர்கள் எதிர்பார்த்ததை பெறுவார்கள். தொழில், வியாபாரங்களில் இருப்பவர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். பெண்களுக்கு மனமகிழ்ச்சி உண்டாகும்.
கன்னி
கன்னி ராசியினருக்கு இன்றைய தினம் ஈடுபடும் வேலைகளில் தடைகள் ஏற்படும். மனதில் குழப்பமான நிலை இருக்கும். பிறருடன் விவாதங்களில் ஈடுபடக் கூடாது. பணியில் இருப்பவர்களுக்கு பணி சுமை அதிகரிக்கும். பெரியவர்களின் ஆசிகள் கிடைக்கும்.
துலாம்
துலாம் ராசியினருக்கு இன்றைய தினம் எடுக்கின்ற முயற்சிகளில் இழுப்பறி நிலை நீடிக்கும். புதிய தொழில், வியாபார முயற்சிகளில் யோசிக்காமல் ஈடுபடக்கூடாது. பெண்கள் வழியில் பொருள் வரவு இருக்கும். சிலருக்கு உடல் நலக் கோளாறு ஏற்பட்டு நீங்கும்.
விருச்சிகம்
விருச்சிக ராசியினருக்கு இன்றைய தினம் சந்திராஷ்டமம் என்பதால் வெளியூர் பயணங்கள் மேற்கொள்ளக்கூடாது. மனதில் வீண் கவலைகளுக்கு இடம் கொடுக்க வேண்டாம். எதிர்பாராத பண விரயம் ஏற்படும். குடும்பத்தினரால் தரும சங்கடமான நிலைக்கு ஆளாகலாம்.
தனுசு
தனுசு ராசியினருக்கு இன்றைய தினம் துணிச்சல் அதிகரிக்கும். எடுத்த காரியங்களை வேகமாக செய்து முடிப்பீர்கள். தொழில், வியாபாரங்களில் போட்டிகளை சமாளித்து வெற்றி காண்பீர்கள். பணியில் இருப்பவர்கள் சக ஊழியர்களின் ஆதரவு பெறுவீர்கள். எதிர்பாரா பொருள் வரவு உண்டு.
மகரம்
மகர ராசியினர் இன்றைய தினம் கடுமையாக உழைக்க வேண்டியிருக்கும். பூர்வீக சொத்துப் பிரச்சனைகளில் இழுபறிநிலை ஏற்படும். சிலருக்கு உடல் களைப்பு உண்டாகும். வெளியூர், வெளிநாடு செல்கின்ற முயற்சிகளில் தாமதங்கள் ஏற்படலாம். தம்பதிகளிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும்.
கும்பம்
கும்ப ராசியினருக்கு இன்றைய தினம் வருமானம் பெருகும். தாய் வழி உறவுகளால் ஆதாயம் ஏற்படும். பெரிய மனிதர்களின் நட்பால் தன வரவு உண்டாகும். எதிர்காலத்திற்கான திட்டங்களை தீட்டுவீர்கள். குடும்பத்தில் மங்களகரமான நிகழ்ச்சி ஏற்படும்.
மீனம்
மீன ராசியினருக்கு இன்றைய தினம் பழைய பிரச்சினைகள் முடிவுக்கு வரும். சிலர் புதிய வீடு, வாகனம் வாங்கும் யோகம் பெறுவார்கள். அரசாங்க ரீதியிலான உதவிகள் இருக்கும். நினைத்ததை சாதித்து முடிப்பீர்கள். சிலர் குடும்பத்திற்காக ஆடம்பர செலவுகளை செய்வார்கள்.