இன்றைய ராசிபலன் (29.10.2023) இன்று உங்களுக்கான நாள் எப்படி?

507

இன்றைய ராசிபலன்…

மேஷம்

மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று சின்ன சின்ன மறதி இருக்கும். அலுவலக வேலையாக இருந்தாலும் சரி, சொந்த தொழிலாக இருந்தாலும் சரி, மறதி காரணமாக சின்ன சின்ன பிரச்சனைகள் வருவதற்கு வாய்ப்புகள் உள்ளது. மற்றப்படி பெருசாக பிரச்சினைகள் இல்லை. குடும்பத்தில் மனநிறைவோடு சந்தோஷமோடு சில நல்ல விஷயங்களை பேசுவீங்க. கணவன் மனைவிக்குள் நல்ல ஒற்றுமை இருக்கும்.

ரிஷபம்


ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்று நன்மை நடக்கக்கூடிய நாளாகத்தான் இருக்கும். ஆனால் உடன் வேலை செய்பவர்களால் சில நச்சரிப்பு இருக்கும். சில சொந்த பந்தங்கள் உங்கள் மனது புண்படும்படி பேச வாய்ப்புகள் உள்ளது. உணர்ச்சிவசப்படாதீங்க. பொறுமையாக இருந்தால் இன்று சாதகமாக நிறைய நல்ல விஷயங்கள் உங்களுக்கு நடக்கும்.

மிதுனம்

மிதுன ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் ஓய்வுக்கு நேரம் கிடைக்கும். நிம்மதியாக தூங்கி ரிலாக்ஸ் செய்விங்க. வேலை செய்யும் இடத்தில் சுமூகமான சூழல் நிலவும். எந்த பிரச்சனையும் பெருசாக இருக்காது. உங்களுடைய புத்திசாலித்தனத்தால் நிறைய காரியங்களை சாதிப்பீர்கள். உடல் ஆரோக்கியத்தில் மேம்பாடு இருக்கும்.

கடகம்

கடக ராசி காரர்களுக்கு இன்று புதிய வாய்ப்புகள் வீடு தேடி வரும். அதை சரியாக பயன்படுத்திக் கொண்டால் வாழ்க்கையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். மேலதிகாரிகளிடம் நல்ல பெயர் வாங்கும் அளவுக்கு வேலையில் திறமை வெளிப்படும். சில பேருக்கு காதல் கணிந்து திருமணத்தில் முடிவதற்கு கூட வாய்ப்புகள் உள்ளது. கவலைகள் நீங்கி நிம்மதி பிறக்கும் நாள் இன்றைய நாள்.

சிம்மம்

சிம்ம ராசிக்காரர்களுக்கு என்று போட்டிகளும் பொறாமைகளும் அதிகமாக இருக்கும். அடுத்தவர்கள் உங்களைப் பற்றி பின்னால் புறம் பேசுவதற்கு வாய்ப்புகள் உள்ளது. அதை கண்டு கொள்ளாதீர்கள். பிறகு உங்களை எதிர்த்தவர்கள் பெரிய ஆளாக மாறிவிடுவார்கள். உங்கள் வேலை மட்டும் கவனத்தோடு செய்தால் நிம்மதி கிடைக்கும்.

கன்னி

கன்னி ராசிக்காரர்களுக்கு இன்று இறக்கமான குணம் இருக்கும். எப்போதும் போல இல்லாமல் கஷ்டப்படுபவர்களை பார்த்து தானாக உதவி செய்ய முன்வருவீர்கள். நீங்கள் செய்யக்கூடிய உதவி உங்கள் குடும்பத்தின் கர்ம வினைகளை குறைக்கும் அளவுக்கு மிகப்பெரியதாக இருக்கும். அந்த வாய்ப்புகளை உங்களுக்கு ஏற்படுத்திக் கொடுக்கும் இன்றைய நாளுக்கு நன்றியை சொல்லுங்கள்.

துலாம்

துலாம் ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் ஆக்கபூர்வமாக நிறைய விஷயங்களை செய்வதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். நிறைய புதிய விஷயங்களை சாதிக்க இன்று அடிக்கல் நாட்டுவீர்கள். அதேபோல அடுத்தவர்கள் சொல்வதையும் காது கொடுத்து கேட்க வேண்டும். அடம் பிடிக்காதீங்க. பெரியவர்களின் பேச்சைக் கேட்டு நடந்தால் நல்லது நடக்கும்.

விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்று ரொம்பவும் அமைதியான நாளாக இருக்கப் போகின்றது. எந்த பிக்கள் பிடுங்கலும் இல்லாமல் உங்களுடைய வேலைகள் நடக்கும். கோவில்களுக்கு குடும்பத்தோடு சென்று இறைவழிபாடு செய்வதற்கும் வாய்ப்புகள் உள்ளது. குடும்பத்தில் சந்தோஷம் பிறக்கும். உடல் ஆரோக்கியத்தில் மேம்பாடு இருக்கும்.

தனுசு

தனுசு ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் அசதி நிறைந்த நாளாக இருக்கும். உங்களுடைய வேலைகளை சரியாக கவனிக்க முடியாத சூழ்நிலையில் இருப்பீர்கள். குறிப்பாக ஆசிரியர்கள் வழக்கறிஞர்கள் பாடகர்கள் இப்படி பேசும் வேலையில் இருப்பவர்கள் தங்களுடைய எனர்ஜியை பயன்படுத்தி வேலை செய்யக்கூடியவர்களுக்கு, இன்று கொஞ்சம் சோர்வு அதிகமாகவே இருக்கும். கொஞ்சம் நீர் சத்து நிறைந்த உணவை அதிகமாக சேர்த்துக் கொண்டால் நல்லது.

மகரம்

மகர ராசிக்காரர்களுக்கு இன்று வரவு நிறைந்த நாளாக இருக்கும். நீங்கள் எதிர்பாராத இடத்திலிருந்து வருமானம் கைக்கு வரும். வாரா கடன் வசூல் ஆகும். நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். ஆரோக்கியத்தில் கொஞ்சம் கூடுதல் கவனம் செலுத்துங்கள். சேமிப்பில் கவனம் செலுத்துங்கள். வாழ்க்கையின் முன்னேற்ற பாதை தெளிவாகும்.

கும்பம்

கும்ப ராசிக்காரர்களுக்கு இன்று சில சுவாரசியமான நல்ல சம்பவங்கள் நடக்கும். நீங்கள் நினைப்பது ஒன்று நடப்பது ஒன்றாக இருந்தாலும், கடவுள் உங்களுக்காகவே அந்த நல்லதை நடத்தி வைத்தது போல உணர்வீர்கள். இரவு நிம்மதியான தூக்கம் இருக்கும். இத்தனை நாள் இருந்து வந்த கஷ்டங்கள் எல்லாம் மறைந்து போனது போல ஒரு உணர்வு. புதிதாக பிறந்தது போல நல்ல உணர்வை பெறுவீர்கள்.

மீனம்

மீன ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் அலைச்சல் நிறைந்த நாளாக இருக்கும். நீண்ட தூரப்பயணம் சோர்வை கொடுக்கும். இருந்தாலும் உங்களுடைய புத்திசாலித்தனத்தால் எல்லா வேலைகளையும் சரியாக முடித்து விடுவீர்கள். சில பேர் உங்களை பற்றி புரிந்து கொள்ளாமல், உங்களைப் பற்றிய கருத்துக்களை தவறாக பரப்புவதற்கு வாய்ப்புகள் உள்ளது. அதை காதில் வாங்கிக் கொள்ளாமல், உங்கள் கடமையை செய்தால் வெற்றி நிச்சயம்.