சவாலால் விபரீதம்… அளவுக்கு மீறி சாப்பிட்டதால் உயிரிழந்த பெண் யூடியூபர்!!

133

இன்றைய அவசரயுகத்தில் இளைஞர்கள் சமூக வலைதளங்களில் லைக்ஸ் பெறுவதற்காக சாகசங்களில் ஈடுபடுகின்றனர். இவை பல நேரங்களில் விபரீதங்களை ஏற்படுத்தி விடுகிறது. சீனாவை சேர்ந்த 24 வயது யூடியூப் இன்ப்லூயன்சர் பான் சியோட்டிங்.

இவர், தான் சாப்பிடும் வகை வகையான உணவுகளை யூ டியூபில் வீடியோவால் வெளியிடுவார். பலமுறை உணவு சாப்பிடும் சவால்களையும் செய்துள்ளார். இதன் மூலம், அவர் பிரபலமடைந்தார்.

இந்நிலையில், பான் சியோட்டிங் தொடர்ந்து 10 மணி நேரம் உணவு சாப்பிடும் சவாலை எதிர்க்கொண்டார். ஒரு வேளைக்கு 10 கிலோ உணவு சாப்பிடும் பழக்கத்தை கொண்டுள்ளார் பான் சியோட்டிங்கை, அவரது பெற்றோர் மற்றும் நலம் விரும்பிகள் எச்சரித்த போதிலும் அவர் உணவு உண்ணும் சவாலை தொடர்ந்து செய்து வந்துள்ளார்.

இந்நிலையில் ஜூலை 14-ம் தேதி அன்று பான் சியோட்டிக் மூச்சடைத்து திடீரென உயிரிழந்துள்ளார். சியோட்டிங்-ன் பிரேத பரிசோதனை அறிக்கையில், அவரது வயிறு சிதைந்துவிட்டதாகவும், செரிக்கப்படாத உணவுகள் இருந்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

சியோடிங்கின் இந்த மரணம் சமூக ஊடகங்களில் கவலையைத் தூண்டியுள்ளது. இதுபோன்ற சவால்களைச் செய்ய வேண்டியதன் அவசியத்தையும் நெட்டிசன்கள் சிலர் கேள்வி எழுப்பி வருகின்றனர்.