சீனாவில் இந்திய மாணவர் மர்ம மரணம்: வெளியான அ திர்ச்சி தகவல்!!

311

அமன் நாக்சென்….

சீனாவில் படித்து வந்த இந்திய மாணவா் சடலமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவரின் மரணம் தொடா்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

இந்திய மாநிலம் பிகாரில் கயா மாவட்டத்தைச் சோ்ந்தவா் அமன் நாக்சென் (Aman Nagsen). 20 வயதாகும் இவா் சீனாவின் டியான்ஜின் நகரில் உள்ள (Tianjin Foreign Studies University) பல்கலைக்கழகத்தில் வணிக நிா்வாகம் படித்து வந்தாா்.

அவா் வசித்து வந்த அறையில் கடந்த ஜூலை 29-ஆம் திகதி அமன் சடலமாக மீட்கப்பட்டாா். அவரின் மரணத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.


கொரோனா நோய்த்தொற்று காரணமாக சீனாவில் படித்து வந்த 23,000 இந்திய மாணவா்கள் நாடு திரும்பியபோதும் அந்நாட்டில் தங்கிய வெகுசில மாணவா்களில் அமன் நாக்செனும் ஒருவா்.

இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையில் தற்போது விமான சேவைகள் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில்,

அமன் நாக்செனின் உடலை இந்தியா அனுப்பிவைப்பதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன என்று சீன அரசு அதிகாரிகள் தெரிவித்தனா்.

அமனின் மா்ம மரணம் குறித்து உரிய விசாரணை மேற்கொள்ளுமாறு மத்திய அரசிடம் வலியுறுத்தப்படும் என்று பிகாா் தலைநகா் பாட்னாவில் அந்த மாநில முதல்வா் நிதீஷ் குமாா் தெரிவித்தாா்.