நூதன முறையில் பிசினஸ்… சாக்லேட் தயாரிக்கும் பெண்ணிற்கு குவியப் போகும் வருமானம்!!

90

வேட்பாளர் படம் பிரசுரித்த சாக்லேட்டுகள் தயாரித்து கொடுக்கும் கேரள பெண் ஒருவருக்கு பல மாநிலங்களில் இருந்து ஓர்டர்கள் குவிந்து வருகிறது.

தேர்தல் நேரத்தில் வாக்காளர்களை கவரும் விதமாக வேட்பாளர்கள் பல்வேறு யுக்திகளை பயன்படுத்துவார்கள். அதாவது, கால்களில் விழுவது, கை கூப்பி கும்பிடுவது போன்ற செயல்களில் ஈடுபடுவார்கள்.

இந்நிலையில் கேரள மாநிலத்தில் சாக்லேட் தயாரிப்பில் ஈடுபட்டுள்ள பெண் ஒருவர் மக்களவை தேர்தலில் போட்டியிட்டும் வேட்பாளர்களின் படங்களை சாக்லேட் கவர்களில் பிரிண்ட் செய்து வரவேற்பை பெற்றுள்ளார்.

கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டம் முக்கம் காரசேரி பகுதியை சேர்ந்தவர் ஆஷிகா கதீஜா. இவர், கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு Home made சாக்லேட் கடையை தொடங்கி, சாக்லேட் கவர்களை தயாரித்து பேக் செய்து விற்பனை செய்கிறார்.

தற்போது தேர்தல் நெருங்கும் நேரத்தில் வேட்பாளர்களின் படங்களை சாக்லேட் கவர்களில் பிரிண்ட் செய்ய வேண்டும் என்று ஆஷிகா நினைத்துள்ளார்.


அப்போது, கேரள மாநிலத்தில் வடகரை மக்களவை தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிடும் ஷாபி பரம்பில் வித்தியாசமான முறையில் பிரச்சாரம் செய்வதை அறிந்தார். இது தொடர்பாக கட்சி நிர்வாகிகளிடம் பேசிய ஆஷிகா அவர்களை சம்மதிக்க வைத்தார்.

பின்னர் ஷாபி பரம்பில் படத்தை பிரிண்ட் செய்த கவர்களில் ஹோம் மேட் சாக்லேட்களை வைத்து கொடுத்துள்ளார். இது காங்கிரஸ் நிர்வாகிகளுக்கு பிடித்து அதிகமான சாக்லேட்களை ஓர்டர் செய்தனர்.

அதேபோல மட்டனூர் தொகுதியின் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் எம்.எல்.ஏ.வுமான சைலஜாவும் சாக்லேட்களை ஓர்டர் கொடுத்தார். இதனால், ஷாபி பரம்பில் மற்றும் சைலஜா ஆகியோரின் படங்கள் அடங்கிய சாக்லேட்டுகள் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகின.

இந்நிலையில், இந்த சாக்லேட்டுகள் அசாம், மகாராஷ்டிரா உள்ளிட்ட பல்வேறு மாவட்ட வேட்பாளர்கள் மத்தியில் பிரபலமாகி அவர்களும் ஆஷிகாவிடம் ஓர்டர் கொடுத்துள்ளனர்.