வருடத்திற்கு 2 ரூபாய் மட்டுமே வருமானம் ஈட்டும் குடும்பம்.. அதிகாரியின் அலட்சியத்தால் நடந்தது என்ன?

146

ஆண்டுக்கு வெறும் ரூ.2 வருமானம் என்று குறிப்பிட்டிருந்த வருமான சான்றிதழானது சமுக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

ஏழ்மையான குடும்பம்

இந்திய மாநிலமான மத்திய பிரதேசத்தில் மிக ஏழ்மையான குடும்பம் ஒன்று உள்ளது. புந்தேல்கண்டில் உள்ள சாகர் நகரில் இருக்கும் ஒரு குடும்பத்தின் ஆண்டு வருமானம் ரூ.2 என்று தாசில்தார் கையெழுத்துடன் வருமானச் சான்றிதழ் (income certificate) வழங்கப்பட்டுள்ளது.

இந்த சான்றிதழானது பண்டா தெஹ்சிலில் உள்ள கோக்ரா கிராமத்தைச் சேர்ந்த பல்ராம் சாதருக்கு சொந்தமானது ஆகும். கடந்த 2014 -ம் ஆண்டில் வாங்கப்பட்ட இந்த சான்றிதழ் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இவர்களின் குடும்பத்தில் இரண்டு மகன்கள், ஒரு மகள் என்று மொத்தம் 5 பேர் இருக்கின்றனர். குடும்ப வறுமையின் காணமாக கூலி வேலை செய்து வருகின்றனர்.

இவர்களின் இளைய மகன் பல்ராம், 12 -ம் வகுப்பு படித்து வருகிறார். இவர், பள்ளியில் ஸ்காலர்ஷிப் பெறுவதற்காக வருமான சான்றிதழை கொடுத்துள்ளார்.


பின்னர், உதவித்தொகை வராததால் ஆசிரியரிடம் கேட்டுள்ளார். அப்போது ஆசிரியர்கள் சரிபார்த்த போது சான்றிதழில் குறிப்பிட்டுள்ள வருமானம் தவறானது என தெரிய வந்தது.

இதுபற்றி பல்ராம் கூறுகையில், “வருமான சான்றிதழை CSC மையத்தில் இருந்து பெற்றதாகவும், குடும்ப வருமானம் ரூ.40,000 என தெரிவித்திருந்தும் அதில் ரூ.2 என குறிப்பிடப்பட்டுள்ளது” என்றார்.

இதில் முக்கிய விடயம் என்னவென்றால் சான்றிதழில் தவறாக இருந்ததை ஊழியர்களோ, சான்றிதழில் கையெழுத்திட்டு வழங்கிய தாசில்தாரோ கவனிக்கவில்லை.

இதையடுத்து, அந்த சான்றிதழ் ரத்து செய்யப்பட்டு ரூ.40,000 வருமான சான்றிதழ் வருமான வழங்கப்பட்டுள்ளது. மேலும், சான்றிதழ் வழங்கிய தாசில்தார் வேறு இடத்திற்கு மாற்றப்பட்டுள்ளார்.