25 சவரன் நகைகள் கொள்ளை.. மகளின் வாழ்க்கையை சூன்யமாக்கிய மாமியார்!!

364

கல்யாணம் செய்து கொடுத்த பின்பும், இன்னொரு தாயாரைப் போல தன்னுடனே தங்க வைத்திருந்த மருமகனை ஏமாற்றி, தன்னை நம்பி வைத்திருந்த 25 சவரன் நகைகளை வீட்டிலிருந்து திருடி அடகு வைத்த மாமியார், மகளின் வாழ்க்கையையும் சூன்யமாக்கி இருக்கிறார்.

சென்னை போரூர் பகுதியை அடுத்துள்ள காரம்பாக்கம், தர்மராஜா நகரை சேர்ந்தவர் சாந்தி, 50. இவர், அப்பகுதியில் உள்ள மூன்று மாடி வீட்டில், மகள் சந்தான லட்சுமி (28), மருமகன் சிவமுருகன் (30) ஆகியோருடன் வசித்து வருகிறார். கடந்த ஆகஸ்ட் 29ம் தேதி சாந்தி, அவரது மகள், மருமகன் ஆகியோர் சாப்பிட்டுவிட்டு வழக்கம்போல் தூங்கச் சென்றனர்.

இந்நிலையில், அடுத்த நாள் அதிகாலை சிவமுருகன் அறையில் இருந்து எழுந்து வந்து பார்த்தபோது, ​​மாமியார் சாந்தி கை, கால்களை கட்டப்பட்ட நிலையில், வாயில் துணியை கட்டி மயங்கி கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார்.

உடனடியாக மாமியார் சாந்தியை மீட்டு பூந்தமல்லி அரசு மருத்துவமனையில் சேர்த்தார் சிவமுருகன். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

பின்னர் சாந்தியிடம் விசாரித்த போது, ​​மர்மநபர்கள் முகத்தில் மயக்க மருந்தை தெளித்து, கை, கால்களை கட்டி, வீட்டின் பீரோவில் இருந்த 25 பவுன் நகைகளை கொள்ளையடித்துச் சென்றதாக கூறினார்.


இது குறித்து சென்னை வளசரவாக்கம் போலீசில் புகார் செய்யப்பட்டது. புகாரின் பேரில் வளசரவாக்கம் போலீசார் கொள்ளை நடந்த வீட்டிற்கு சென்று விசாரணை நடத்தினர். கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் யார் என்பது தெரிந்ததும் அவர்களை கைது செய்ய போலீசார் முடிவு செய்து தீவிர விசாரணை நடத்தினர்.

மறுபுறம் கொள்ளையர்களை பிடிக்க உதவி கமிஷனர் கருணாகரன் தலைமையில் 6 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை தனிப்படை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.

இதற்கிடையில் சாந்தி கூறியது போல் மர்மநபர்கள் வீட்டிற்குள் புகுந்து கொள்ளையடித்ததற்கான எந்தவொரு தடயமே இல்லை என்பாதால் போலீசாருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது. இதையடுத்து வீட்டில் இருந்தவர்களிடம் போலீசார் தனித்தனியாக விசாரணை நடத்தினர்.

ஒருவருக்கு ஒருவர் வெவ்வேறு தகவல்களை அளித்தனர். முன்னுக்குப்பின் முரணாக பேசியதால், வீட்டில் இருந்தவர்கள் மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. பின்னர் போலீசார் வீட்டை சோதனையிட்டபோது, ​​அதிகப்படியான தங்க நகைகளை அடகு வைத்ததற்கான ரசீது கிடைத்தது. மேலும் நகை அடகு கடையில் இருந்து சாந்தியின் செல்போனில் வட்டிக்கு பணம் கட்ட வேண்டும் என்கிற குறுஞ்செய்தியும் வந்துள்ளது.

அதையடுத்து, சாந்தி நடிப்பதை உணர்ந்த போலீசார், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சாந்தியிடம் விசாரித்த போது, ​​நகைகளை அடகு வைத்து, கொள்ளையடித்தது போல் நடித்ததை ஒப்புக் கொண்டனர்.

இது குறித்து சாந்தியும் போலீசில் வாக்குமூலம் அளித்தார். சாந்தியின் மகள் லட்சுமியின் அறை சிறியதாக உள்ளதால் நகைகள் அடங்கிய பீரோவை லட்சுமி தனது தாயார் அறையில் வைத்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

மகனின் செலவுக்காக மகளின் நகைகளையும் அவரது நகைகளையும் அடகு வைத்துள்ளார் சாந்தி. சாந்தி ஆன்லைன் சூதாட்டத்திற்காக நகைகளை அடகு வைத்து பணத்தையும் இழந்தார்.

செப்டம்பர் 5ம் தேதி, தன் மகள் லட்சுமி திருமணத்திற்கு செல்வதால் பீரோவில் இருந்து நகைகளை எடுக்க வரும்போது தான் பிடிபடுவோம் என்பதை உணர்ந்த சாந்தி, நகைகள் திருடப்பட்டதாக நாடகமாட திட்டமிட்டுள்ளார்.

அதன்படி சாந்தி அதிகாலை 4 மணிக்கு எழுந்து சர்க்கரை நோய்க்கு சாப்பிடும் மாத்திரைகளை அதிகமாக சாப்பிட்டார். மேலும் கை, கால்களை துணியால் கட்டி வாயில் துணியை அடைத்துள்ளார்.

மயக்கமடைந்த அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அப்போது, ​​வீட்டுக்குள் புகுந்த மர்ம நபர்கள், தன்னை கட்டிப்போட்டு, நகைகளை கொள்ளையடித்துச் சென்றதாக நாடகமாடி கூறினார்.

ஆனால் அடகு வைத்த நகைகளின் ரசீதுகள் காரணமாக அவர் போலீசாரிடம் சிக்கியுள்ளார். சாந்தி அளித்த வாக்குமூலத்தை போலீசார் தெரிவித்தனர். இதனிடையே நகைகளை அடகு வைத்து கொள்ளையடித்த சாந்தி மீது வழக்குப்பதிவு செய்ய வளசரவாக்கம் போலீசார் திட்டமிட்டுள்ளனர்.

சென்னை போரூர் பகுதியில் மருமகன் வீட்டில் தங்க நகைகளை பறித்து அடகு வைத்த மாமியார் நாடகமாடிய சம்பவம் சென்னை போரூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.