3 வயது மகள் பரிதாப மரணம் : காருக்குள் பூட்டி சென்ற தாய்!!

264

போதை என்னவெல்லாம் செய்யும்? என்பதற்கு இன்னொரு உதாரணமாக தன்னுடைய 3 வயது மகளைப் பறிகொடுத்திருக்கிறார் அமெரிக்காவைச் சேர்ந்த ஹெர்னாண்டஸ் எனும் பெண்மணி.

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் வசித்து வரும் ஹெர்னாண்டஸ், கடந்த 11ம் தேதி மது அருந்திவிட்டு தனது 3வயது குழந்தையை பள்ளியில் இருந்து அழைத்து சென்றுள்ளார்.

காரின் பின் இருக்கையில் தனது மகளை அமர வைத்துக் கொண்டு, பேஷன் லேனில் தனது காரை நிறுத்தி இருந்திருக்கிறார். அப்போது வெளியில் வெப்பநிலை 104 டிகிரியை எட்டியது. இந்நிலையில், ஹெர்னாண்டஸ் தன்னுடைய குழந்தையை காருக்குள் வைத்து பூட்டி விட்டு சென்றுள்ளார்.

இதனால் குழந்தை வெப்பம் தாங்க முடியாமல் கதறி அழுதது. இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் காரின் கண்ணாடியை உடைத்து குழந்தையை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.

அங்கு குழந்தையைப் பரிசோதித்த டாக்டர்கள், சிகிச்சை பலனின்றி குழந்தை உயிரிழந்ததாக தெரிவித்தனர்.மேலும், வெப்ப வாதத்தால் ஏற்பட்ட சிக்கலே மரணத்துக்குக் காரணம் என்றும் தெரிவித்தனர்.


இது குறித்து ஹெர்னாண்டஸின் பெரிய அத்தையிடம் விசாரணை நடத்தப்பட்டது. ஹெர்னாண்டஸ் தனது 3 வயது குழந்தையை பள்ளியில் இருந்து அழைத்துச் செல்ல சென்றதாக அவர் கூறினார்.

ஆனால் ஹெர்னாண்டஸ் குடிபோதையில் குழந்தையை காருக்குள் வைத்து, காரின் கதவுகளைப் பூட்டி விட்டார். வெயிலின் காரணமாக குழந்தை இறந்ததாக அவர் கூறினார்.

போலீசார் ஹெர்னாண்டஸின் காரை சோதனையிட்டதில், உள்ளே காலி மது பாட்டில்கள் இருப்பதைக் கண்டனர். அதன் பிறகு ஹெர்னாண்டஸைக் கைது செய்து மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்ற்னார்.