4 வயது சிறுவனின் உயிரைப் பறித்த ஜெல்லிமிட்டாய்… உங்கள் வீட்டில் குழந்தைகள் இருக்கிறதா? எச்சரிக்கை ரிப்போர்ட்!

780

குழந்தைப் பருவம் குதூகலமானது. அவர்கள் காசு, பணத்திற்கு ஆசைப்படுபவர்கள் இல்லை. அவர்களின் விருப்பமே மிட்டாய் சாப்பிடுவதுதான். அந்தவகையில் தன் குழந்தைக்கு வாங்கிக்கொடுத்த மிட்டாயே உ யிரைப் பறித்து இருக்கிறது. பெரம்பலூர் மாவட்டம் அன்னைநகரை சேர்ந்தவர் தர்மராஜ்.

இவரது மனைவி சசிதேவி. இந்த தம்பதிக்கு நான்கு வயதில் ரெங்கநாதன் என்ற மகன் உள்ளார். தர்மராஜ் தனது மகனுக்கு அப்பகுதியில் உள்ள கடை ஒன்றில் இருந்து 5 ரூபாய் கொடுத்து ஜெல்லி மிட்டாய் வாங்கிக் கொடுத்து உள்ளார்.

அதை சாப்பிட்ட சிறுவன் ம ய க்கம் அடைந்தான். உடனே பெற்றோர் சிறுவனை பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவனை பரிசோதித்து பார்த்த மருத்துவர்கள் சிறுவன் இ ற ந் து விட்ட தகவலை சொல்ல தன் பையனின் ம ர ண த்துக்கு மிட்டாயே காரணம் என பெற்றோர் கு ற்றம் சாட்டியுள்ளனர்.


உணவுப் பாதுகாப்பு அதிகாரியான சொளமியாவோ, ஜெல்லி மிட்டாய் உணவுக்குழாயில் அடைப்பு ஏற்படுத்தும் வாய்ப்பு இருப்பதாக கூறியிருக்கிறார். சிறுவனின் பி ரே த பரிசோதனைக்கு பின்னரே கூடுதல் விபரங்கள் தெரிய வரும். உங்கள் வீட்டில் குழந்தைகள் இருந்தால் உங்களுக்கான எ ச்சரிக்கைப் பதிவு தான் இது!