ஓவியா..
களவாணி படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு நுழைந்த ஓவியா, பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு தமிழக இளைஞர்கள், தாய்மார்கள், மனதில் இடம்பிடித்தார். அதன் பிறகு ஓவியா நடிப்பில் 90 எம்.எல் படம் வெளியாகி இவரின் இமேஜ் வேற லெவலில் Damage ஆனது. ஆனாலும், ஓவியா மனதில் பட்டதைதான் செய்வேன் என Confident ஆக இருந்தார்.
2019- ஆம் வருடம் ராகவா லாரன்ஸுடன் ஓவியா நடித்திருந்த காஞ்சனா 3 படம் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றது. இந்நிலையில் பேட்டியில் பங்கேற்ற ஓவியாவிடம் பாலியல் கல்வி, விபச்சாரம் குறித்து கேள்விகள் கேட்கப்பட்டது. அதற்கு பதில் அளித்த அவர், பாலியல் கல்வி குறித்து மட்டுமே எல்லோரும் பேசுகிறீர்கள்.
அதை பிராக்டிக்கலாக செய்து பார்க்கவும் விட வேண்டும் என்று தெரிவித்துள்ளார். மேலும், விபச்சாரத்தை சட்டபூர்வமாக வேண்டும் எனவும், அப்போது தான் கற்பழிப்புகள் மற்றும் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் குறையும் எனவும், தான் ஒரு நிகழ்ச்சிக்கு சென்றால் அங்கு பவுன்ஸர்கள் இல்லை என்றால் என் நிலைமை வேறு மாதிரி இருக்கும்.
என்னை கிள்ளுவது தொடுவது கூட்டத்தில் தொந்தரவு படுத்துவது பவுசன்ஸர்கள் இல்லை என்றாலும், நான் போய் தான் ஆக வேண்டும் ஏன் ஏன்றால், நான் வாக்கு கொடுத்து காசு வாங்கி உள்ளேன். நான் அதற்கு ரியாக்ஷன் கொடுக்க முடியுமா என்று ஓவியா தன்னுடைய ஆதங்கத்தை தெரிவித்துள்ளார்.