உத்தரப்பிரதேசத்தில்..
உத்தரப்பிரதேச மாநிலம், கிரேட்டர் நொய்டாவின் ஆல்பா 2 பகுதி உள்ளது. இங்கு உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் தனியார் கட்டுமான நிறுவனத்தில் பணிபுரியும் 28 வயது வாலிபர் வசித்து வருகிறார். நேற்று முன்தினம் அவர் வசிக்கும் 3வது மாடியில் இருந்து நாயின் அலறல் சத்தம் கேட்டுள்ளது.
அண்டை வீட்டார் வந்து பார்த்த போது அந்த வாலிபர் வீட்டின் பால்கனியில் வைத்து நாயை பாலியல் துஷ்பிரயோகம் செய்து கொண்டிருந்தார். இதைக் கண்ட அண்டை வீட்டார் அபாய அலாரத்தை ஒலிக்கச் செய்துள்ளனர்.
இதனால் அந்த வாலிபர் நாயை மூன்றாவது மாடியில் இருந்து கீழே தூக்கி எறிந்தார். இதனால் அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் விரைந்து சென்று நாயைப் பார்த்த போது அது ரத்த வெள்ளத்தில் படுகாயங்களுடன் இருந்தது தெரிய வந்தது.
இதுகுறித்து அவர்கள், அந்த வாலிபர் மீது போலீஸில் புகார் செய்தனர். அத்துடன் நாயை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். இதையடுத்து அந்த வாலிபர் மீது இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவு 377 (எந்தவொரு ஆண், பெண் அல்லது மிருகத்துடன் இயற்கையின் ஒழுங்குக்கு எதிரான உடலுறவு) கீழ் ஒரு வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது,
அதே நேரத்தில் விலங்குகள் வதை தடுப்புச் சட்டம், 1960-ன் கீழ் வழக்கும் பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து அந்த வாலிபர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளதாக உள்ளூர் பீட்டா 2 காவல் நிலையத்தின் பொறுப்பாளர் வினோத் குமார் மிஸ்ரா கூறினார்.
கைது செய்யப்பட்ட போது அந்த வாலிபர் போதையில் இருந்ததாக மிஸ்ரா கூறினார். இந்த சம்பவம் கிரேட்டர் நொய்டா பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
सेक्टर अल्फा २ ग्रेटर नॉएडा में एक मादा डॉगी के साथ बलात्कार और और उसको तीसरी मंजिल से फेक कर मारने के जुर्म में मुकदमा पंजीकृत ‘अभियुक्त गिरफ्तार ‘
बीटा 2 कोतवाली का मामला @noidapolice @myogiadityanath @BJP4India @_MohitChauhan @TandonRaveena @AdvocateManjuS3 @Dewarva pic.twitter.com/MMGinU90Pu— Adv. Vishal Gautam .(पण्डित विशाल गौतम ) (@AdvVishalGauta1) October 26, 2023