இப்ப கூட நான் ரெடிதான்… ஓப்பனாக கூறிய ஷகிலா!!

164

ஷகிலா..

என்னதான் சினிமாவில் நல்ல கதைகளை கொடுக்கக்கூடிய படங்கள் நிறைய இருந்தாலும் 90ஸ்களில் தனது கவர்ச்சியான நடிப்பினால் தனக்கென ரசிகர்களை சேர்த்தவர் நடிகை ஷகிலா. மலையாள படங்களில் அடல்ட் கதைகளில் நடிக்க ஆரம்பித்தார்.என்னதான் மலையாள கதையாக இருந்தாலும் தமிழிலும் அப்படங்கள் மொழிப்பெயர்க்கப்பட்டு தமிழ்நாட்டிலும் நல்ல வசூலை பெற்று வந்தது.

இவ்வாறு ஷகிலாவும் மக்களிடையே பிரபலமானார். பின்னர் பல தமிழ் திரைப்படங்களில் நடித்த ஷகிலா கவர்ச்சியான கதாபாத்திரத்திலேயே நடித்து வந்தார். ஆனால் நிஜ வாழ்விலும் இவருக்கு பலரிடமும் காதல் ஏற்பட்டுள்ளது. ஆனால் எந்த காதலும் இவருக்கு நிலைத்து நிற்கவில்லையாம். அனைவரும் என்ன உபயோகப்படுத்திவிட்டு ஏமாற்றிவிட்டனர் என அவரே பல நிகழ்ச்சிகளில் தெரிவித்துள்ளார்.

பின்னர் திருமணமே வேண்டாம் என முடிவெடுத்து தொடர்ந்து பல திரைப்படங்களில் நடித்து வந்தார். இவர் விஜய் டிவியில் ஒளிப்பரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மக்களின் பெரிய ஆதரவை சம்பாதித்தார். அதுவரையிலும் மக்கள் ஷகிலாவை பார்த்த கண்ணோட்டங்கள் போய் ஷகிலா மீது பெரிய மரியாதையை ஏற்படுத்தும் விதமாக அந்த நிகழ்ச்சியில் நடந்து கொண்டார்.


பின்னர் தொடர்ந்து பல நிகழ்ச்சிகளில் பங்காற்றி வருகிறார். இவர் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் தான் நல்ல கதாபாத்திரத்தில் நடித்தால் மக்கள் அதை ஏற்று கொள்ள மாட்டார்கள் என தெரிவித்துள்ளார். இவர் கொப்ரமெட்ட எனும் ஒரு தெலுங்கு படத்தில் நடித்துள்ளார். அக்கதாபாத்திரம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றதாம்.

அப்படத்தில் சீரியஸான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ஆனால் அது காமெடி படம் என்பதால் தன்னை பார்ப்பவர்கள் சிரித்தார்கள் என தெரிவித்துள்ளார். அதனால் தனக்கு அம்மா கதாபாத்திரத்தில் நடிக்க மிகவும் விருப்பம் எனவும் ஆனால் எந்த இயக்குனரும் தனக்கு வாய்ப்பு அளிக்க விரும்பவில்லை எனவும் அவர் தனது ஆதங்கத்தை தெரிவித்துள்ளார்.