தாய் திட்டியதால் மனமுடைந்த மாணவர் : விரக்தியில் எடுத்த விபரீத முடிவு!!

284

பெங்களூருவில்…

கர்நாடக மாநிலம் பெங்களூருவை சேந்தவர் தம்மையா. இவர் பெங்களூரு – மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள தனியார் சுங்கச்சாவடி நிறுவனத்தில் செக்யூரிட்டியாக பணியாற்றி வருகிறார். இதன் காரணமாக இவர் லைசென்சுடன் துப்பாக்கி வைத்துள்ளார்.

இவரது மகன் விஷ்ணு உத்தப்பா, முதலாம் ஆண்டு இன்ஜினியரிங் படித்து வருகிறார். இந்நிலையில், படிப்பு தொடர்பாக விஷ்ணுவுக்கும், அவரது தாயாருக்கும் இடையே கடந்த 3ம் தேதி வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் விஷ்ணுவை, தாய் கடுமையாக திட்டியதாக தெரிகிறது.

இதனால் அவர் மனமுடைந்து காணப்பட்டார். இந்நிலையில், நேற்று தம்மையா, அவரது மனைவி இருவரும் வெளியே சென்றதாக தெரிகிறது. வீட்டில் தனியாக இருந்த விஷ்ணு, தந்தையின் துப்பாக்கியை எடுத்து தன்னைத்தானே நெஞ்சில் சுட்டுக்கொண்டு இறந்தார். இன்று பிற்பகல் வீடு திரும்பிய தம்மையாவும், அவரது மனைவியும் மகன் இறந்துகிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.


உடனடியாக இதுகுறித்து பெங்களூரு காவல் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீஸார், விஷ்ணுவின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

தொடர்ந்து, இதுதொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். விஷ்ணு சுட்டுக்கொண்ட துப்பாக்கியையும் மீட்டுள்ளனர். இந்த சம்பவம் பெங்களூருவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.