சத்தியமா விடவே கூடாது… சாத்தான்குளம் சம்பவம் தொடர்பில் கொந்தளித்த நடிகர் ரஜினிகாந்த்!!

944

சாத்தான்குளம் சம்பவம் குறித்து விசாரணை நடத்தச் சென்ற மாஜிஸ்திரேட்டை காவல் உயர் அதிகாரிகள் மற்றும் காவலர் அவமதித்ததை அறிந்து அதிர்ச்சியடைந்ததாக நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.

சாத்தான்குளத்தைச் சேரந்த் தந்தை, மகனான ஜெயராஜ், பென்னிக்ஸ் மரணம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவத்தில் அடுத்தடுத்து பரபரப்பான திருப்பங்கள் இடம்பெற்று வருகிறது.

சாத்தான்குளம் சம்பவம் குறித்து விசாரணை நடத்தச் சென்ற மாஜிஸ்திரேட்டை காவல் உயர் அதிகாரிகள் மற்றும் காவலர் அவமதித்தது அதிர்ச்சி அளித்தது.

இந்த வழக்கில் சிபிஐ விசாரணை தொடங்கும் முன் தடயங்களை அழிக்க வாய்ப்பு உள்ளதாக கூறிய நீதிபதிகள், அதுவரை நெல்லை சிபிசிஐடி டிஎஸ்பி அனில்குமார், இந்த வழக்கின் விசாரணையை இன்றே தொடங்க உத்தரவிட்டனர்.


இந்நிலையில் இச்சம்பவம் குறித்த நடிகர் ரஜினிகாந்த ட்விட்டரில் பதிவிட்டதாவது, தந்தையையும், மகனையும் சித்ரவதை செய்து மிருகத்தனமாகக் கொன்றதை மனித இனமே எதிர்த்து கண்டித்த பிறகும், காவல் நிலையத்தில் மாஜிஸ்திரேட் எதிரிலேயே சில காவலர்கள் நடந்து கொண்ட முறையும், பேசிய பேச்சும் அறிந்து அதிரச்சி அடைந்தேன்.

சம்பந்தப்பட்ட அனைவருக்கும் தகுந்த தண்டனை கண்டிப்பாக கிடைத்தே ஆக வேண்டும். விடக் கூடாது #சத்தியமா_விடவே_கூடாது என பதிவிட்டுள்ளார்.