பிரித்தானியாவில் இவர்களுக்கு மட்டும் அபராதம் கிடையாதாம்…!

858

பிரித்தானியாவில் ஜூலை 24 முதல் கடைகளுக்கு செல்லும் வாடிக்கையாளர்கள் மாஸ்க் அணிவது கட்டாயம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மாஸ்க் அணியாதவர்களுக்கு 100 பவுண்டுகள் அபராதம் விதிக்கப்படும். அவர்கள் 14 நாட்களுக்குள் அபராதம் செலுத்த முன்வந்தால், அவர்கள் 50 பவுண்டுகள் செலுத்தினால் போதும்.

அதேபோல், பொது போக்குவரத்தை பயன்படுத்துவோர் கட்டாயம் மாஸ்க் அணியவேண்டும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டுவிட்டது.

இந்நிலையில், சிலருக்கு மட்டும் இந்த விதிகளிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

  • 11 வயதுக்கு குறைவான சிறுவர் சிறுமியர்
  • பணியிலிருக்கும் போக்குவரத்து ஊழியரும் அவரை சார்ந்த ஊழியர்களும்
  • பணியிலிருக்கும் பொலிஸ் கான்ஸ்டபிள்கள்
  • அவசர மருத்துவ உதவிக் குழுவினர்
  • தீயணைப்பு வீரர்கள்.

பணியிலிருக்கும் எல்லை பாதுகாப்பு படை அலுவலர். உங்களுக்கென்று ஒரு அறை ஒதுக்கப்பட்டிருக்கும் பட்சத்தில் நீங்கள் தனியாகவோ அல்லது உங்கள் குடும்ப உறுப்பினர்களுடன் இருக்கும்போதோ, கார்களை சுமந்து செல்லும் படகுகளுக்குள் உங்கள் காருக்குள் நீங்கள் இருந்தாலோ, நீங்கள் மாஸ்க் அணியத் தேவையில்லை.


ஒருவேளை நீங்கள் மாஸ்க் அணியாமல் பொலிசாரிடம் சிக்கினால், கீழ்க்கண்ட காரணங்களுக்காக உங்களுக்கு அபராதம் விதிக்கப்படுவதிலிருந்து விலக்கு அளிக்கப்படும்.

உடல் அல்லது மன நல பாதிப்பு கொண்ட ஒருவர் மாஸ்க் அணிவதால் அவரது நிலைமை மோசமாகும்பட்சத்தில் நீங்கள் மாஸ்க் அணியத்தேவையில்லை.

சுவாசக்கோளாறுகள் கொண்டவர்கள், அல்லது செவித்திறனற்றோர் முதலான உதடுகள் அசைவை வைத்து மட்டுமே பேசுவதை அறிந்துகொள்ளக்கூடிய ஒருவருடன் நீங்கள் இருக்கும்பட்சத்தில், மேலும், சாப்பிடும்போது, தண்ணீர் முதலான பானங்கள் குடிக்கும்போது மற்றும் மாத்திரை போடும்போது நீங்கள் மாஸ்கை அகற்றலாம்.

பொலிசார் உட்பட, அதிகாரிகள் உங்கள் மாஸ்கை அகற்றச் சொல்லும்போது, நீங்கள் மாஸ்கை அகற்றவேண்டும். இந்த விதிகளும், விதிவிலக்குகளும் பொதுப்போக்குவரத்தை பயன்படுத்தும்போது பின்பற்றப்படவேண்டியவை. கடைகளுக்கான விதிகளும் விதிவிலக்குகளும் இன்னமும் முழுமையாக அரசால் விவரிக்கப்படவில்லை. என்றாலும், அவையும் இதே அடிப்படையில்தன அமைந்திருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கடைகளில் பணியாற்றும் ஊழியர்கள் யூனியன், இந்த விதிகளை வரவேற்றாலும், விரைவில் அரசு விளக்கமான கூடுதல் விதிகளை அறிவிக்காதவரையில், அது குழப்பங்களை ஏற்படுத்தும் என்றும், கடைகளில் பணியாற்றுவோர் பிரச்சினைகளை சந்திக்க நேரிடும் என்றும் எச்சரித்துள்ளது.