தந்தையிடம் இருந்து தாயை காப்பாற்ற ஓடி வந்த மகன் மரணம்! பரிதாப சம்பவத்தின் பின்னணி!!

971

இந்தியாவில் குடி போதையில் இருந்த தந்தையின் தாக்குதலில் இருந்து தாயை காப்பாற்ற முயன்ற போது, அந்த தாயின் மகள் தலையில் அடிபட்டு உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கேரளாவின் கோழிக்கோடு மாவட்டத்தில் பலுசேரி அருகே கினலூரை சேர்ந்தவர் வேணு. இவருக்கு மினி என்ற மனைவியும், அனு, அலீனா மற்றும் ஆலன் என்று மூன்று பிள்ளைகள் இருப்பதாக கூறப்படுகிறது

இந்நிலையில் கடந்த சனிக்கிழமை இரவு வேணு அளவுக்கு அதிகமாக மது அந்தி வந்து, மனைவியான மினியுடன் தகராறு செய்துள்ளார்.

இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது தூங்கிக் கொண்டிருந்த ஆலன் உடனடியாக அம்மாவை அப்பாவிடம் இருந்து காப்பாற்றுவதற்காக வந்து அவரிடம் பேசியுள்ளார்.


அப்போது வேணு, மனைவி மற்றும் ஆலன் இருவரையும் ஆத்திரத்தில் கீழே தள்ளியுள்ளார். இதில் ஆலன் தலையில் பலத்த காயம் அடைந்து, கீழே மயங்கியுள்ளார்.

இதையடுத்து அக்கம்பக்கத்தினர் உடனடியாக வீட்டிற்குள் விரைந்த போது, ஆலன் நடிப்பதாக கூறி வேணு, அவர்களை வீட்டிற்குள் அனுமதி மறுத்துள்ளார்.

அதன் பின், ஒரு தனியார் மருத்துவமனைக்கு ஆலன் கொண்டு செல்லப்பட்ட நிலையில், அவரின் உயிரைக் காப்பாற்ற முடியவில்லை, பரிதாபமாக உயிரிழந்தார் இதையடுத்து இந்த சம்பவம் குறித்து வேணு மீது பொலிசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.