லண்டனுக்கு வந்த இளம்பெண்ணை விபச்சாரத்தில் தள்ளிய 2 சகோதரர்கள்! கர்ப்பமான பின் நடந்த கொடுமை… பகீர் பின்னணி!!

968

ரோமானியாவில் இருந்து பிரித்தானியா வந்த பெண்ணை ஏமாற்றி விபச்சாரத்தில் தள்ளி அவர் கர்ப்பிணியாக இருந்த காலக்கட்டத்திலும் கொடுமைகள் செய்த 2 சகோதர்களுகளின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Ioan Dumitru (24) மற்றும் Ilcic Dumitru (19) ஆகிய இருவரும் சகோதரர்கள் ஆவார்கள். கடந்த ஆண்டு ரோமானியா நாட்டில் இருந்து லண்டனுக்கு 20 வயது இளம்பெண் வந்தார். அவரை Luton விமான நிலையத்துக்கு வந்து இருவரும் வரவேற்று தொழிற்சாலையில் வேலைக்கு சேர்த்து விடுவதாக கூறி அழைத்து சென்றுள்ளனர்.

பின்னர் வடக்கு லண்டனுக்கு அப்பெண்ணை அழைத்து சென்ற Ioan மற்றும் Ilcic, இரவு நேரத்தில் அப்பெண்ணை சாலையில் நின்று விபச்சாரத்தில் ஈடுபட வற்புறுத்தியுள்ளனர்.

இதற்கு அவர் மறுத்த நிலையில், நீ பணம் சம்பாதிக்க வில்லை என்றால் உன் தலையை பிளந்துவிடுவேன் என மிரட்டியுள்ளனர். இதன் பிறகு ஒரு கட்டத்தில் அப்பெண் கர்ப்பமானார், ஆனால் அவரின் கருவை கலைக்க முடியவில்லை. ஆனாலும் கர்ப்பிணி என்றும் பாராமல் ஒரே நாளில் 10 ல் இருந்து 11 ஆண்களுடன் அவரை விபச்சாரத்தில் Ioan மற்றும் Ilcic ஆகியோர் ஈடுபடுத்தியுள்ளனர்.


அவர் சம்பாதிக்கும் பணத்தை பறித்து கொள்வதை வழக்கமாக கொண்ட இரு சகோதரர்களும் அவரை அடித்து கொடுமைப்படுத்தியுள்ளனர். 7 மாத கர்ப்பிணியாக இளம்பெண் இருந்த சமயத்தில் தனது குழந்தை வயிற்றில் இறந்திருக்கும் என கருதினார், ஒரு கட்டத்தின் தனது வாடிக்கையாளரிடம் உள்ள செல்போனை வாங்கி ரோமானியாவில் உள்ள குடும்பத்தாருக்கு போன் செய்து நடந்ததை கூறினார்.

இதையடுத்து அவர்கள் பிரித்தானிய பொலிசாரை தொடர்பு கொண்டு புகார் அளித்தனர். புகாரையடுத்து Ioan மற்றும் Ilcic-ஐ பொலிசார் கைது செய்தனர். அதே சமயம் கர்ப்பிணியாக இருந்த பெண் தனது சொந்தநாட்டுக்கு சென்று ஆண் குழந்தையை பெற்றெடுத்தார்.

இந்த நிலையில் கைது செய்யப்பட்ட இருவருக்கும் இந்த மாத இறுதிக்குள் நீதிமன்றம் தண்டனை விபரத்தை அறிவிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.