காலையில் வந்த மெசேஜ்… போனை பார்த்ததும் இன்ப அதிர்ச்சி- பிரபல நடிகருக்கு குவியும் பாராட்டுகள்!!

889

கொரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்ட நடன கலைஞர்களுக்கு பணம் கொடுத்து உதவியுள்ளார் பிரபல நடிகரான ஹிருத்திக் ரோஷன்.

கொரோனா ஊரடங்கால் அனைத்து துறையுமே முடங்கியுள்ளது, குறிப்பாக சினிமா உலகில் பல பிரிவுகளில் பணியாற்றும் கலைஞர்கள் வருமானமின்றி தவிக்கின்றனர்.

வீட்டு வாடகை கொடுக்க முடியாமல், சாப்பிட வழியில்லாமல் சொந்த ஊருக்கு பயணித்துள்ளனர்.

இவர்கள் படும் கஷ்டத்தை நண்பர்கள் மூலம் தெரிந்து கொண்ட ஹிருத்திக் ரோஷன், உதவி செய்ய நினைத்தார்.


இதன்படி தன்னுடன் பல படங்களில் நடித்த நடன கலைஞர்கள் 100 பேருக்கு அவர்களது வங்கி கணக்கில் பணம் செலுத்தியுள்ளார்.

இதுபற்றி பேசிய நடன ஒருங்கிணைப்பாளர் ராஜ் சூரானி, இந்த கஷ்டமான காலத்தில் 100 நடனக் கலைஞர்களுக்கு ஹிருத்திக் உதவி செய்துள்ளார்.

அவர்களில் பலரும் வாடகை கொடுக்க பணமின்றி சொந்த கிராமங்களுக்குச் சென்றுவிட்டார்கள் சிலருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

எல்லோருக்கும் ஹிருத்திக் உதவியது பாராட்டுக்குரியது. பின்னணி நடனக் கலைஞர்கள் இந்த எஸ்எம்எஸ் செய்தியைப் பார்த்ததும் உற்சாகமாகிவிட்டனர்.

மனமார்ந்த நன்றியை ஹிருத்திக் ரோஷனுக்கு தெரிவித்ததாக கூறியுள்ளார்.