இன்றைய ராசிபலன் (01.11.2023) இன்று உங்களுக்கான நாள் எப்படி?

161

இன்றைய ராசிபலன்…

மேஷம்

மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் அதிகமாக முன் கோபம் வரும். எல்லாரிடமும் எரிந்து எரிந்து பேசக்கூடிய சூழ்நிலையில் இருப்பீர்கள். இதனால் உங்களை எல்லோருமே பின்னாடி திட்ட போறாங்க. தேவையில்லாமல் இவ்வளவு கோபப்பட்டு விட்டோம் என்று, இந்த நாள் இறுதியில் யோசிக்க போறீங்க. கொஞ்சம் பொறுமையாக இருங்கள். எல்லாம் நல்லபடியாக நடக்கும்.

ரிஷபம்


ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் ஏற்ற இறக்கங்கள் நிறைந்த நாளாக இருக்கும். வேலை செய்யும் இடத்தில் எல்லா வேலைகளையும் சரியான நேரத்தில் முடிக்க முடியாது. கொஞ்சம் பிரஷர் இருக்கும். தடுமாற்றம் ஏற்படும். பணம் சம்பந்தப்பட்ட விஷயத்தில் கூடுதல் கவனம் தேவை. இது அல்லாமல் வீட்டில் கணவன் மனைவி பிரச்சனை. பிள்ளைகள் தொந்தரவு, என்று சில குடும்ப சண்டைகளும் வருவதற்கு வாய்ப்புகள் உள்ளது.

மிதுனம்

மிதுன ராசிக்காரர்களுக்கு இன்று நினைத்தது நடக்கும். வேலை செய்யும் இடத்தில் வந்த சிக்கல்கள் விலகும். கணவன் மனைவிக்கிடையே ஒற்றுமை அதிகரிக்கும். வருமானத்தில் பிரச்சனை இருக்கும். பாக்கெட் காலி ஆவதற்கு வாய்ப்புகள் உள்ளது. சுப செலவுகள் ஏற்படும். ஆரோக்கியம் சம்பந்தப்பட்ட விஷயத்தில் கூடுதல் கவனம் செலுத்தவும்.

கடகம்

கடக ராசிக்காரர்களுக்கு இன்று நல்ல நாளாக இருக்கும். நீங்கள் முயற்சி செய்யக் கூடிய காரியங்கள் வெற்றியை கொடுக்கும். மேலதிகாரிகள் உங்களுக்கு ஆதரவாக பேசுவார்கள். சொந்த தொழில் இருந்து வந்த இடர்பாடுகள் சரியாகும். வங்கி கடன் கிடைக்கும். ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.

சிம்மம்

சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்று எதிர்பாராத அதிர்ஷ்டம் காத்துக் கொண்டிருக்கிறது. தவறாக முடிவு எடுத்து விட்டோமே, என்று நினைத்த காரியத்தின் மூலம் வெற்றி கிடைக்கும். மன மகிழ்ச்சி அடைவீர்கள். குடும்பத்தில் விருந்தாளிகளின் வருகையால் சின்ன சின்ன சிக்கல்கள் வர வாய்ப்பு உள்ளது. தாய்மாமன் வழி உறவிம் ஜாக்கிரதையாக நடந்து கொள்ளுங்கள்.

கன்னி

கன்னி ராசிக்காரர்களுக்கு இன்று எதிர்பார்த்தது நடக்காது. அதனால் கொஞ்சம் கடுப்பாக இருப்பீர்கள். முன்கோபம் வரும். அடம் பிடித்து எல்லாவற்றையும் உங்களுக்கு சாதகமாகவே மாற்ற வேண்டும் என்று நினைப்பீர்கள். அது தவறு. நாம் எடுக்கும் முடிவு நாலு பேருக்கு பாதிப்பு இல்லாமல் இருக்க வேண்டும். அடுத்தவர்களை புண்படுத்தி விட்டு, நாம் செய்யும் காரியம் நிச்சயம் நமக்கு மனநிறைவையும் சந்தோஷத்தையும் கொடுக்காது என்பதை நீங்க இன்னைக்கு உணரனும்.

துலாம்

துலாம் ராசிக்காரர்களுக்கு இன்று சிந்தித்து செயல்பட வேண்டிய நாளாக இருக்கும். அவசரப்பட்டு ஒரு முடிவை எடுக்கக் கூடாது. முன்பின் தெரியாத நபர் பேச்சைக் கேட்கக் கூடாது. ஆழம் தெரியாமல் எந்த விஷயத்திலும் காலை விடக்கூடாது. பிறகு பிரச்சனை உங்களுக்கு தான். பண நஷ்டம் ஏற்பட வாய்ப்புகள் உள்ளது. யாருக்கும் இன்று நீங்க கடன் கொடுக்காதீங்க.

விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்று பொறுப்புகள் கொஞ்சம் கூடுதலாக இருக்கும். வேலை செய்யும் இடத்தில் புதிய பொறுப்புகளை உங்கள் கையில் ஒப்படைப்பார்கள்.‌ அதையெல்லாம் சமாளிக்க பத்து கை உங்களுக்கு தேவை. தலைக்கு மேலே ஒரு கிலோ பாரத்தை வைத்தது போல இருக்கும். வீட்டு வேலை செய்பவர்களுக்கும் அப்படித்தான் வேலை பளு கொஞ்சம் அதிகமாக இருக்கும். உடல் அசதி ஏற்படும்.

தனுசு

தனுசு ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் அற்புதமான நாளாக இருக்கும். தீபாவளிக்கு தேவையான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். சுப செலவு ஏற்படும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிறைவாக இருக்கும். ஆரோக்கியத்தில் நல்ல மேம்பாடு இருக்கும். உங்களுடைய அம்மா அப்பாவும் சந்தோஷப்படும் அளவுக்கு நிறைய நல்ல காரியம் செய்ய போறீங்க.

மகரம்

மகர ராசிக்காரர்களுக்கு இன்று உறவினர்களால் சிக்கல் வர வாய்ப்புகள் உள்ளது. மாமியார் மருமகள் நாத்தனார் சண்டை என்று ஏதாவது வந்தால் கொஞ்சம் அட்ஜஸ்ட் செய்து போகவும். பெண்கள் அனுசரித்து சென்றால் பிரச்சனை கிடையாது. வாக்குவாதம் செய்தால் பிரச்சனை பெருசாக வாய்ப்பு உள்ளது. கூடுமானவரை உங்கள் குடும்ப விஷயத்தை மூன்றாவது மனிதரிடம் கொண்டு போய் பஞ்சாயத்து செய்யாதீங்க.

கும்பம்

கும்ப ராசிக்காரர்களுக்கு இன்று வார்த்தையில் கவனம் இருக்க வேண்டும். யாரிடம் ஆவது கோபமாக பேசி திட்டிவிட்டால் பிரச்சனை உங்களுக்குத்தான். குறிப்பாக மேலதிகாரிகளை பகைத்துக் கொள்ள வேண்டாம். இருக்கிற வேலையை தக்க வைத்துக் கொள்ளுங்கள். புதிய வேலைக்கு முயற்சி செய்யக் கூடிய எண்ணத்தை கொஞ்சம் தள்ளிப் போடுவது நல்லது. மனதை அமைதி செய்ய குலதெய்வ வழிபாடு செய்யவும்.

மீனம்

மீன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் சந்தோஷம் நிறைந்த நாளாக இருக்கும். குடும்பத்தோடு வெளியிடங்களுக்கு சென்று நேரத்தை கவனிப்பீர்கள். வேலை செய்யும் இடத்தில் இருந்து சின்ன சின்ன திட்டு வாங்க வாய்ப்பு உள்ளது. ஆனால் பெரிய பிரச்சனை கிடையாது. கொஞ்சம் செலவுகள் அதிகரிக்கும். பண பற்றாக்குறை உண்டாகும். மனைவியிடம் திட்டு வாங்க கூடிய சூழல் ஏற்படும்.