கொழும்பு உட்பட மேல் மாகாணத்தில் முகக் கவசம் அணியாமலும் சமூக இடைவெளி பின்பற்றாமலும் சிக்கிய 3061 பேர் கைது செய்யப்பட்டு கடுமையாக எச்சரிக்கப்பட்டு விடுவிக்கப்பட்டுள்ளனர்.
முக கவசம் அணியாமை தொடர்பில் 2093 பேரும் சமூக இடைவெளி பின்பற்றாமை தொடர்பில் 968 பேரும் இவ்வாறு எச்சரிக்கப்பட்டு விடுக்கப்பட்டுள்ளதாக மேல் மாகாணத்தின் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அலுவலகம் தெரிவித்துள்ளது.
இதேவேளை, நேற்று காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரையிலான காலப்பகுதியினுள் மேல் மாகாணத்தில் பிடியாணை பிறப்பிக்கப்பட்ட 771 பேரும் ஊழல் வழக்கு தொடர்பில் 792 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அத்துடன் இன்று காலை 5 மணியுடன் நிறைவடைந்த 24 மணித்தியாலத்தில் மேல் மாகாணத்தில் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பின் மேலும் 792 பேர் கைது செய்யப்பட்டதாக குறிப்பிடப்படுகின்றது.