டியூசன் சென்ற 12 வயது சிறுவன்.. அடிக்கடி வயிற்றுவலி.. பரிசோதனையில் பெற்றோர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி!

1000

12 வயது சிறுவன் வயிற்றுபோக்கு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அவரை பரிசோதித்த மருத்துவர்கள் சிறுவன் பல நாட்களாக வண்புணர்வு செய்த கொடுமை அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

கொரோனா வைரஸ் அதிக பரவி வருவதால், பள்ளிகள் செயல்படவில்லை. இதனால் ஆன்லைன் வகுப்புகள் மூலம் பாடத்தினை நடத்தி வருகின்றனர்.

இதையடுத்து, குஜராத்தில் உள்ள அகமதாபாத்தில், 12 வயதுடைய சிறுவனுக்கு, தால்தேஜ் தாலுகாவை சேர்ந்த 21 வயது பார்த் பரோட் என்னும் ஆசிரியரை கல்வி கற்க பெற்றோர்களால் நியமிக்கப்பட்டார்.

இதன்பின்னர், சிறுவனுக்கு கிட்டத்தட்ட ஒரு மாத காலமாக அடிக்கடி வயிற்றுப்போக்கு ஏற்பட்டுள்ளது. முதலில் சாதாரணமாக எடுத்துக்கொண்ட பெற்றோர் பிறகு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.


வழக்கமான மருந்துகளுக்குப் பிறகும் அவரது நோய் குறையவில்லை. பின்னர், மருத்துவர் சிறுவனை பரிசோதித்தபோது, அதிர்ச்சியளிக்கும் விதமாக சிறுவன் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான சம்பவம் தெரியவந்துள்ளது.

இதுகுறித்து, மருத்துவர்கள் சிறுவனிடம் விசாரிக்கும் போது தன் டியூஷன் ஆசிரியர் தான் தன்னை துஷ்பிரயோகம் செய்தார் எனவும்,

இதனை வெளியே சொல்லனால் தான் தற்கொலை செய்து கொள்வேன் எனவும் கூறியுள்ளார். இதனால் பயந்து தான் யாரிடமும் கூடவில்லை எனக்கூறியுள்ளார் சிறுவன்.

இதனையடுத்து, 12 வயது சிறுவனை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கிய பார்த் பரோட் ஆசிரியர் மீது இந்திய தண்டனைச் சட்டத்தின், பிரிவு 377 (இயற்கைக்கு மாறான செக்ஸ்) கீழ் இப்போது போலீசார் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு கைது செய்துள்ளனர்.