மகனின் தாக்குதலுக்கு இலக்கான தாய் பரிதாப பலி!

993

மஹியங்கனை தமன பிரதேசத்தில் மகனின் தாக்குதலுக்கு இலக்கான தாய் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

இந்தச் சம்பவம் நேற்று அதிகாலை 4.00 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

சம்பவத்தில் 62 வயதான பெண்ணே பொல்லால் தாக்கப்பட்டதில் உயிரிழந்துள்ளார்.


அத்துடன் இந்தச் சம்பவத்தில் காயமடைந்த மற்றொருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.