மொத்தம் 3.. சைலண்டா அடுத்தடுத்து திருமணம் செய்த பெண் : இன்ஸ்டாவில் போட்டோவை பார்த்து ஷாக்கான கணவர்!!

396

கர்நாடகாவில்..

பிரசாந்த், [35] கர்நாடகா மாநிலம் தவணகெரேவை சேர்ந்தவர். மாண்டியா அருகே உள்ள நரஹள்ளி பகுதியைச் சேர்ந்த சினேகா [30] இன்ஸ்டாகிராம் மூலம் அறிமுகமானார். இருவரும் தங்களது செல்போன் எண்ணை பரிமாறிக்கொண்டு பேசி வந்தனர். ஒரு கட்டத்தில் இருவருக்கும் இடையே காதல் ஏற்பட்டது. பின்னர் இரு வீட்டாரின் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டனர்.

இந்நிலையில், மூன்று மாதங்களுக்கு முன், சினேகா, தான் கர்ப்பமாக இருப்பதாகவும், தாய் வீட்டிற்கு செல்வதாக பிரசாந்திடம் கூறியுள்ளார். நீண்ட நாட்களாகியும் வீடு திரும்பாததால் சினேகாவின் செல்போன் எண்ணுக்கு தொடர்பு கொண்டார். செல்போன் எண் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த பிரசாந்த் போலீசில் புகார் செய்தார்.

புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சினேகாவை தேடி வந்தனர். இதற்கிடையில், சில நாட்களுக்கு முன்பு, பிரசாந்த் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சினேகாவையும் மற்றொரு இளைஞனையும் திருமண கோலத்தில் ஒன்றாகப் பார்த்தார். இதுகுறித்து சினேகாவின் உறவினர்களிடம் கேட்டபோது, ​​சினேகாவுக்கு ஏற்கனவே இரண்டு திருமணம் நடந்ததாகவும்,


தற்போது மீண்டும் ஒருவரை திருமணம் செய்துள்ளதாகவும் தெரியவந்தது. முதல் கணவரை பிரிந்த சினேகா தனக்கு திருமணம் ஆகவில்லை என்று கூறி பிரசாந்த் உள்பட 3 பேரை திருமணம் செய்து கொண்டதும் தெரியவந்துள்ளது. இதுகுறித்து தகவலறிந்த போலீசார், சினேகாவை தேடி வருகின்றனர்.