ராஜினாமா செய்த பிரான்ஸ் பிரதமர் மற்றும் அமைச்சர்கள் மீது குவியும் புகார்கள்..!

1041

பிரான்ஸ் முன்னாள் பிரதமர் மற்றும் இரண்டு முன்னாள் அமைச்சர்கள் கொரோனா வைரஸ் நெருக்கடியை கையாண்டது குறித்து பிரெஞ்சு நீதிமன்றம் விசாரணை நடத்த உள்ளதாக பாரிஸ் வழக்கறிஞர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

வெள்ளிக்கிழமை பரவலாக எதிர்பார்க்கப்பட்ட அரசாங்க மறுசீரமைப்பின் ஒரு பகுதியாக ராஜினாமா செய்த முன்னாள் பிரதமர் எட்வார்ட் பிலிப் மற்றும் இரண்டு முன்னாள் சுகாதார அமைச்சர்கள் ஆக்னஸ் புஜின் மற்றும் ஆலிவர் வெரானே ஆகியோர் பிரான்சில் கொரோனா பரவலை எவ்வாறு நிர்வகித்தனர் என்பதை நீதித்துறை விசாரணை ஆராயும்.

பிப்ரவரியில் புஜின் பதவி விலகியதை அடுத்து ஆலிவர் வெரானே பிரான்சின் சுகாதார அமைச்சராக பொறுப்பேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது..


முன்னாள் அமைச்சர்கள் மீதான ஒன்பது புகார்களை, மனுக்கள் மற்றும் புகார்கள் குழு உறுதிசெய்த பின்னர் குடியரசு நீதி மன்றத்தில் விசாரணை தொடங்கும். இந்த குழு சி.ஜே.ஆரின் ஒரு பகுதியாகும், மேலும் வழக்குத் தொடரலாமா என்று தீர்மானிக்க புகார்களை ஆராய்கிறது.

தனியார் நபர்கள் மற்றும் மருத்துவர்களால் புகார்கள் பதிவு செய்யப்பட்டதாக பாரிஸ் வழக்கறிஞர் அலுவலகம் தெரிவித்துள்ளது.