லண்டனில் பட்டப்பகலில் இளம்பெண்ணை கட்டாயப்படுத்தி கடத்த முயன்ற நபர்! சிசிடிவி புகைப்படத்துடன் முக்கிய தகவல்!!

974

லண்டனில் இரயில் நிலையத்தில் இளம்பெண்ணிடம் கொள்ளையடித்து அவரை கடத்த நபர் ஒருவர் முயன்ற நிலையில் அப்பெண் அவரிடம் இருந்து சாதுர்யமாக தப்பித்துள்ளார்.

London’s Waterloo இரயில் நிலையத்தில் புதன்கிழமை பகல் 2.30 மணிக்கு இளம்பெண்ணொருவர் நின்றிருந்தார்.

அப்போது அவர் அருகில் வந்த நபர் தனக்கு ஒரு உதவி வேண்டும் என கூறி தொந்தரவு செய்தான், இதையடுத்து அப்பெண் அங்கிருந்து வேகமாக சென்றார்.

அவரை பின் தொடர்ந்து சென்ற அந்த ஆண் டிக்கெட் வாங்கும் எந்திரம் அருகில் தன்னுடய Oyster cardக்கு டாப் அப் செய்ய சொல்லி கட்டாயப்படுத்தினார். இதன் பின்னர்Westminster Stationக்கு தன்னுடன் வருமாறு வற்புறுத்தி கடத்த முயன்றான். ஆனால் உஷாரான அப்பெண் அங்கிருந்து நழுவி இரயில்வே ஊழியரிடம் சென்று புகார் அளித்தார்.


இதையடுத்து அங்கிருந்து தப்பித்து சென்றுள்ளார் அந்த நபர். சம்பவம் தொடர்பாக பொலிசார் கூறுகையில், இந்த சம்பவத்தில் தொடர்புடைய நபரின் சிசிடிவி புகைப்படத்தை வெளியிட்டுள்ளோம்.

அவர் குறித்து யாருக்கேனும் தகவல் தெரிந்தால் எங்களிடம் தெரிவிக்கலாம் என கூறியுள்ளனர்.