தமிழகத்தில் திருப்பூர் மாவட்டம் குமரானந்தபுரத்தில் வசித்து வருபவர் 51 வயது வெங்கடேஷ். மனைவியின் சொந்த ஊரான பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை தாலுக்கா வாலிகண்டபுரத்தில் தற்போது வசித்து வருகிறார்.
இவர் செப்டம்பர் 12ம் தேதி நேற்று பெரம்பலூர் கலெக்டர் கிரேஸ் பச்சாவிடம் கண்ணீருடன் கோரிக்கை அளிக்கப்பட்டுள்ளது. இது குறித்து அளித்த கோரிக்கை மனுவில் திருமணமாகி 20 ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது. எங்களுக்கு ஒருமகள், ஒரு மகன் உள்ளனர்.
நான் திருப்பூரில் டிரைவராக வேலை பார்த்து வருகிறேன். எனது மனைவி கௌரியை (45) வெளிநாடு அனுப்புவதற்காக வாலிகண்டபுரம் கிராமத்தை சேர்ந்த முபாரக், பாத்திமா, சலீம் மூவரும் சேர்ந்து பக்ரீன் நாட்டில் வீட்டு வேலைக்காக அனுப்பி வைத்தேன்.
பக்ரீன் நாட்டில் ஒரு வீட்டில் வேலைக்காக மாத சம்பளம் ரூ.30000மும், உணவும், தங்குவதற்கு இடமும் தருவதாக உறுதி அளித்தனர். ஆகஸ்ட் 20ம் தேதி கேரளா மாநிலம், கோழிக்கோடு விமான நிலையத்தில் இருந்து பக்ரீன்நாட்டுக்கு விமானம் மூலம் அனுப்பி வைத்தோம்.
ஆரம்பத்தில் ஒரு வீட்டில் மட்டும் வேலை செய்து வந்த நிலையில், ஒரே வாரத்தில் 3 வீட்டு வேலைகளை செய்ய சொல்லி துன்புறுத்தியுள்ளனர். அவர்களுக்கு உணவும் வழங்கப்படவில்லை. அரபியின் மனைவி துன்புறுத்த தொடங்கியுள்ளார்.
தற்போது உடல் சோர்வடைந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக போனில் பேசிய போது தெரிய வந்தது.
வெளி நாட்டுக்கு அனுப்பியவர்களிடம் கேட்ட போது, வெளிநாட்டு வேலை என்றால் அப்படி தான் இருக்கும், இஷ்டம் இருந்தால் செய்யுங்கள், இல்லையெனில் மொத்தமாக ரூ2,25,000 கொடுத்தால் உங்கள் மனைவியை அனுப்பி வைக்க சொல்கிறோம் என சவடால் பேசியுள்ளனர்.
உணவு தராமல் சித்ரவதை செய்வதால் உயிருக்கு போராடும் எனது மனைவியை பத்திரமாக மீட்டு தர வேண்டும் என அந்த மனுவில் கூறியுள்ளார். இந்த மனுவை பெற்று கொண்ட மாவட்ட கலெக்டர் உடனடி நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்துள்ளர்.