அக்காவின் திருமணம் முடிந்து 1 மணிநேரத்தில் உயிரிழந்த தம்பி… நடந்தது என்ன?

958

அக்காவின் திருமணம் முடிந்த ஒரு மணி நேரத்தில் தம்பி விபத்தில் மரணமடைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி பகுதியை சேர்ந்தவர் நஞ்சுண்டன். இவரது மனைவி எல்லம்மா. இவர்களுக்கு 2 மகன்கள் 1 மகள் இருந்த நிலையில், இளைய மகன் தமிழரசன்(20) கல்லூரியில் 3ம் ஆண்டு படித்து வந்துள்ளார்.

இந்நிலையில் தமிழரசனின் அக்காவிற்கு நேற்று காலை அப்பகுதியில் உள்ள கோயில் ஒன்றில் காலை 5 மணிக்கு திருமணம் நடைபெற்றுள்ளது.

அக்காவின் திருமணம் முடிந்த ஒரு மணி நேரத்தில் தமிழரசன் இருசக்கர வாகனத்திற்கு பெட்ரோல் போட்டுவிட்டு வீட்டிற்கு சென்றுள்ளார்.


அப்போது வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் ஒன்று மோதியதில் தமிழரசன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார்.

தவலறிந்த அப்பகுதி பொலிசார் சம்பவ இடத்துக்கு சென்று தமிழரசனின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஓசூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

அக்கா திருமணம் முடிந்த 1 மணி நேரத்தில் தம்பி இறந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.