அடுத்தடுத்து மோதிய 56 வாகனங்கள்… 17 பேர் பலி : 22 பேர் படுகாயம் : இப்படி ஓர் விபத்தை கண்டிருக்க மாட்டீங்க!!

358

சீனாவில்..

கொரோனா தொற்றின் பிறப்பிடமான சீனாவில் தற்போது பயங்கரமான பனி பெய்து வருகிறது. இந்நிலையில், மூடு பனி காரணமாக சாலைகள் சரிவர தெரியாமல் தினந்தோறும் விபத்துக்கள் நடைப்பெற்று வருகின்றன. இன்று காலை சீனாவில் பயங்கரமான சாலை விபத்தினால், 56 வாகனங்கள் அடுத்தடுத்து மோதிக் கொண்ட விபத்தில் 17 பேர் பலியானார்கள்.

இந்த சாலை விபத்தில் 22 பேர் படுகாயமடைந்துள்ள நிலையில், சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இன்று அதிகாலை 1 மணிக்கு இந்த சாலை விபத்து நிகழ்ந்தது.

கடும் பனி பொழிவு காரணமாக முன்னால் சென்றுக் கொண்டிருந்த வாகனங்கள் தெரியாமல் ஒன்றுடன் ஒன்று மோதிக் கொண்டதாக செய்திகள் வெளியாகி உள்ளன. விபத்து நடந்த பின்னரும் கூட, விபத்து பற்றி தெரியாமல் அடுத்தடுத்து பின்னால் வந்த வாகனங்கள் மோதி மேலும் விபத்துக்குள்ளானது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


சீனாவின் கிழக்கு பகுதியில் உள்ள ஜியாங்சி மாகாணத்தில் இன்று அதிகாலை நன்சாங் கவுண்டி எனும் இடத்தில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.

விபத்து நிகழ்ந்து அடுத்த ஒரு மணி நேரத்திற்குப் பின்னரே, நஞ்சாங் மாவட்டப் போக்குவரத்துக் போலீசார் விபத்து நடந்த பகுதிக்குள் சென்றுள்ளனர். அதன் பின்னர், மூடுபனி வானிலை நிலவுவதாகக் கூறி அந்த பகுதிக்கு செல்லும் ஓட்டுநர்களுக்கு அறிவுரை வழங்கி தடுத்துள்ளனர்.

பனிமூட்டம் அதிக அளவில் உள்ளதால், இது போக்குவரத்து விபத்துக்களை எளிதில் ஏற்படுத்தும் என்றும், வேகத்தைக் குறைத்து, கவனமாக ஓட்டவும் என்றும், வாகனங்களை முந்திச் செல்ல வேண்டாம் கூறப்பட்டுள்ளது.

சீனாவில் கடுமையான பாதுகாப்புக் கட்டுப்பாடுகள் இல்லாததால் சாலை விபத்துகள் தொடர் கதையாகி வருகிறது. கடந்த மாதம், மத்திய சீனாவில் மூடுபனியில் குறைந்த தெரிவுநிலை காரணமாக பல வாகனங்கள் நெடுஞ்சாலையில் ஒன்றுடன் ஒன்று மோதிக் கொண்டன.