அதிக ரத்தப்போக்கு காரணமாக பரிதாபமாக உயிரிழந்த இளம்பெண்!!

141

தமிழகத்தில் திருவாரூர் மாவட்டத்தில் 45 நாட்களுக்கு தனியார் மருத்துவமனையில் அறுவை சிகிச்சை முறையில் குழந்தையைப் பெற்றெடுத்தவர் செலஸ்டினா.

இவருக்குவயது 35. இவர் பிரசவத்திற்கு பின் அதிக ரத்தப்போக்கு காரணமாக அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

தனியார் மருத்துவமனையின் தவறான சிகிச்சையே பெண் உயிரிழப்புக்கு காரணம் எனக்கூறி காவல் நிலையத்தில் உறவினர்கள் புகார் அளித்துள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.