அதிர்ச்சி 16 வயது மாணவிக்கு தாலி கட்டி பலாத்காரம் செய்த கொடுமை!!

163

கடந்த 2021-ம் ஆண்டு தூத்துக்குடி மாவட்டம் தென்கரைக்கு உட்பட்ட பகுதியில் 16 வயது பள்ளி மாணவியை ஏமாற்றி, தாலி கட்டி பலாத்காரம் செய்த வழக்கில் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது.

பள்ளி மாணவி ஏமாற்றப்பட்டு, தாலி கட்டி பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார். இந்த வழக்கில், தூத்துக்குடி சக்தி நகரைச் சேர்ந்த ரவி மகன் மணிகண்டன் (வயது 26) கைது செய்யப்பட்டார். தெற்குப் பகுதி காவல் நிலைய போலீஸார். பாதிக்கப்பட்டது சிறுமி என்பதால், போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர்.

 

இந்த வழக்கை அப்போதைய தெற்கு காவல் நிலைய இன்ஸ்பெக்டர் ஆனந்தராஜன் மற்றும் தூத்துக்குடி அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் வனிதா ஆகியோர் 08.02.2022 அன்று குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். இந்த வழக்கு விசாரணை தூத்துக்குடி மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

வழக்கை விசாரித்த நீதிபதி மாதவ ராமானுஜம், மணிகண்டனுக்கு 10 ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனையும், ரூ.2000/- அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். இந்த வழக்கில் அரசு வழக்கறிஞர்களாக எல்லம்மாள், சிறப்பு அரசு வழக்கறிஞர் ஸ்ரீதேவி ஆகியோர் ஆஜராகினர்.