அரசு மருத்துவமனை அவலம்.. சக்கர நாற்காலி இல்லாததால் கணவனை தூக்கிச் சென்ற மனைவி!!

10

மேற்கு வங்காள மாநிலம் உத்தர் தினஜ்பூர் மாவட்டத்தில் உள்ள ராய்ப்பூர் கிராமத்தைச் சேர்ந்த சலிதா பர்மன்.

அவரது கணவர் பரிதோஷ் (51) ஒரு கட்டுமான விபத்தில் காலில் காயம் அடைந்தார். சலிதா தனது கணவரை ராய்கஞ்ச் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக ஆட்டோவில் அழைத்துச் சென்றார்.

மருத்துவமனையில் பணிபுரியும் பாதுகாப்பு ஊழியர்கள் ஆட்டோவை வளாகத்தில் நிறுத்துமாறு வற்புறுத்தினர்.

நடக்க முடியாத பரிதோஷுக்கு, வேறு வழியில்லாமல் தனது கணவரை முதுகில் சுமந்து புறநோயாளிகள் பிரிவிக்கு அழைத்துச் சென்றனர்.

அவரைப் பரிசோதித்த பிறகு, மருத்துவர்கள் பரிதோஷை வேறொரு கட்டிடத்தில் CT ஸ்கேன் செய்ய அறிவுறுத்தினர்.


சக்கர நாற்காலி அப்போதும் வழங்காததால், சலிதா மீண்டும் தனது கணவரை முதுகில் சுமந்து வேறொரு கட்டிடத்திற்குச் சென்றார்.

சலிதா தனது கணவரை சுமந்து செல்லும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகின்றன.

மேலும், அரசு நடத்தும் மருத்துவமனையில் அடிப்படை வசதிகள் கூட இல்லை என்று பலர் தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்துகின்றனர்.